லியொனார்டோ டா வின்சி
From Wikipedia, the free encyclopedia
லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோன லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார் [1] உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்.[2]
லியொனார்டோ டா வின்சி | |
---|---|
பிறப்பு | Leonardo di ser Piero da Vinci 15 ஏப்பிரல் 1452, 1452 Anchiano |
இறப்பு | 2 மே 1519, 1519 (அகவை 67) Amboise |
பணி | ஓவியர், பொறியாளர், வானியல் வல்லுநர், மெய்யியலாளர், உடற்கூறுநர், கணிதவியலாளர், சிற்பி, கட்டடக் கலைஞர், புத்தாக்குனர், இசையமைப்பாளர், தாவரவியலாளர், வேதியியலாளர், விலங்கியலார், caricaturist, அறிவியலாளர், architectural draftsperson, வரைகலைஞர், எழுத்தாளர், visual artist |
வேலை வழங்குபவர் |
|
சிறப்புப் பணிகள் | இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு |
பாணி | portrait, religious painting, religious art |
கையெழுத்து | |
லியனார்தோ டா வின்சி அடிப்படையில் ஒரு ஒவியராக அறியப்படுபவர். இவருடைய "மோனா லிசா" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஒவியமாக கருதப்படுகிறது.[3]
இலியனார்தோ தா வின்சி தொழில் நுட்பவியல் சார்ந்த அறிவாற்றலுக்காக பெரிதும் மதிக்கப்படுபவர். நிலவியல் உட்பட பல துறைகளில் தன்னுடைய அறிவார்ந்த எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய காலத்தில் நினைத்து பார்க்க முடியாத பல புதுமைப் புனைவுகளைச் செய்துள்ளார்.[4]
இவர் உடற்கூறியல், கட்டிடக்கலை, ஒளியியல், நீர்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் புதுமைப் புனைவு களை நிகழ்த்தியுள்ளார். எனினும், அவற்றைத் தன் சம காலத்தில் வெளியிடாததால், இந்ந துறைகளில் இவருடைய நேரடி தாக்கம் இல்லை.[5]