லுகாயன் தீவுக்கூட்டம்
From Wikipedia, the free encyclopedia
லுகாயன் தீவுக்கூட்டம் (Lucayan Archipelago) அல்லது பகாமா தீவுக்கூட்டம் (Bahama Archipelago) பகாமாசு பொதுநலவாயத்தையும் பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்களில் ஒன்றான துர்கசு கைகோசு தீவுகளையும் அடக்கிய தீவுக் குழு ஆகும். இந்தத் தீவுக்கூட்டம் மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில், அண்டிலிசுக்கு வடக்கே, புளோரிடாவிற்கு கிழக்கு, தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது.
லுகாயன் தீவுக்கூட்டம் Lucayan Archipel | |
---|---|
கரிபியனில் அமைவிடம் | |
மண்டலம் | கரிபியன் |
நாடுகளும் ஆட்புலங்களும் | கரிபியன் நாடுகள் |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,308 km2 (5,524 sq mi) |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 3,67,536 |
• அடர்த்தி | 24.6/km2 (64/sq mi) |
நேர வலயம் | ஒசநே−5 (ஈஎஸ்டி) |
• கோடை (பசேநே) | ஒசநே−4 (EDT) |
பகாமா தீவுக்கூட்டத்தில் உள்ள தீவுகள் அரசியல்வழியே பிரிக்கப்பட்டிருந்தாலும் இரண்டும் பொதுவான நிலவியல், சூழலியல்,பண்பாட்டுக் கூறுகளை கொண்டுள்ளன என்று வில்லியம் கீகன் கூறுகிறார். [1] இத்தீவுக் கூட்டத்தில் உள்ள இரு நாடுகளும் கரிபியக் கடலை எல்லையாகக் கொண்டில்லாமையால் இவை மேற்கிந்தியத் தீவுகளாக இருப்பினும் கரிபியத் தீவுகளாக கருதப்படுவதில்லை. இருப்பினும் வசதிக்காக பெரும்பாலும் கரிபியன் நாடுகளுடன் சேர்க்கப்படுகின்றன.