ஹதீஸ்
இஸ்லாத்தில் ஹதத் அல்லது அதர் என்பது இஸ்லாமிய தீர்க்கதரிசி முஹம்மதுவின் சொற்கள், செயல்கள் மற் / From Wikipedia, the free encyclopedia
ஹதீஸ் (அரபு:حديث, ஹதீத்) என்பது நபிகள் நாயகம் முகமது நபியின் (ஸல்) அவர்களின் சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதி ஆகும். [1]மரபுவழி இசுலாமியச் சட்டவியலுக்கும் இறையியலுக்கும் குர்ஆனுடன் சேர்ந்து ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. ஹதீதுகள் 8ம் 9ம் நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டன. இவற்றில் 'சிஹாஹ் சித்தாஹ்' என்று அழைக்கப்படுகின்ற புஹாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத் ஆகிய கிரந்தங்கள் இஸ்லாமிய உலகில் மிகப் பிரபலமானவையாகக் கொள்ளப்படுகின்றன. இவை தவிர பிரபலமான வேறு பல ஹதீத் கிரந்தங்களும் உள்ளன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஹதீதுல் குத்ஸி எனப்படுகின்ற நபிமொழிகள் அல்லாஹ் கூறுகின்றான் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிவையாகும். இவற்றின் வசன அமைப்பும், பொருளும் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெற்றவை போல் தோன்றினாலும், அவை முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உரியவையாகும். எனினும் இறைவன் கூறுவதாகக் குறிப்பிடுவதும், நேர்கூற்றாகக் கூறப்படுவதும் இவற்றின் சிறப்புப் பண்புகளாக அமைகின்றன. இவை முழுவதுமே 'ஆஹாத்' என்னும் இறை அறிவிப்பு மூலம் கிடைக்கப் பெற்றதாக இருப்பதால் திருக்குர்ஆனிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. இவை 'வஹி ஹைலு மத்லு' மூலம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டிருக்கின்றன.
(உ-ம்) எனது அடியார்களே! அநியாயம் செய்வதை நான் என்மீது தடை செய்திருக்கிறேன். எனவே நீங்களும் ஒருவருக்கு ஒருவர் அநியாயம் செய்யவேண்டாம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |