குர்து மக்கள்
From Wikipedia, the free encyclopedia
குர்து மக்கள் மத்திய கிழக்கின் தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக் (மேல் மெசொப்பொத்தேமியா), வடமேற்கு ஈரான் மற்றும் தென்மேற்கு ஆர்மீனியா நாடுகளின் மலைப்பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எதுவும் கிடையாது. பெரும்பாலானவர்கள் சன்னி இஸ்லாமியர்களாக இருந்தாலும், வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.[13] குர்து ஜனநாயகப் படைகள் இசுலாமிய அரசு தீவிரவாதிகளின் பிடியிலிருந்து வடகிழக்கு சிரியா மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளை கைப்பற்றினர். [14]
மொத்த மக்கள்தொகை | |
---|---|
27-37.5 மில்லியன் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
துருக்கி | ~15 மில்லியன்[1][2] |
ஈரான் | 4.8-6.6 மில்லியன்[3] |
ஈராக் | 4-6 மில்லியன்[4] |
சிரியா | 0.9-2.8 மில்லியன்[5] |
ஆப்கானித்தான் | 200,000[6] |
அசர்பைஜான் | 150,000[6] |
இசுரேல் | 100,000[7] |
லெபனான் | 80,000[6] |
சியார்சியா | 34,000-60,000[8] |
கசக்கஸ்தான் | 46,000[9] |
ஆர்மீனியா | 45,000[6] |
துருக்மெனிஸ்தான் | 40,000[6] |
செருமனி | 500,000-800,000[6] [10] |
பிரான்சு | 120,000[10] |
சுவீடன் | 100,000[10] |
நெதர்லாந்து | 70,000[10] |
சுவிட்சர்லாந்து | 60,000[10] |
ஆஸ்திரியா | 50,000[10] |
ஐக்கிய இராச்சியம் | 25,000 -80,000[6] [10] |
டென்மார்க் | 8,000-30,000[11] |
கிரேக்க நாடு | 20,000-25,000[10] |
ஐக்கிய அமெரிக்கா | 40,000[12] |
கனடா | 6,000[6] |
மொழி(கள்) | |
குர்தி பாரசிகம், துருக்கியம், அரபு ஆகியன இரண்டாம் மொழியாக பேசப்படுகிறது. சுவீடியம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியன அயல்நாடுகளில் குடியேறியவர்களினால் பேசப்படுகிறது. | |
சமயங்கள் | |
சன்னி இசுலாம் அத்துடன் சில சியா இசுலாம், யாசிடிசம், யர்சான், யூதம், கிறிஸ்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
other ஈரானிய மக்கள் (தாலிஷ் · பலுச் · கிலாக் · பக்தியாரி · பாரசிகர்) |
குர்தி மொழியைப் பேசும் ஒரு தொன்ம மக்களான இவர்கள் வாழும் நிலப்பரப்பு குர்திஸ்தான் என்று அவர்களால் அழைக்கப்படுகிறது. குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் தொடரான நிலப்பரப்பைக் குறிக்கின்றது. இதை ஒரு தனி நாடாக ஆக்க வேண்டும் என்று குர்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.