யூதம்
From Wikipedia, the free encyclopedia
யூதம் (Judaism, எபிரேயம்: יהודה, "யெகுதா" (Yehudah)) என்பது யூத இன மக்களின் சமயம் ஆகும். இது யூதர்களுடைய சமயம், மெய்யியல், பண்பாடு மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு கடவுட் கொள்கை உடைய பண்டைய ஆபிரகாமிய சமயமான இது தோராவை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இஸ்ரயேல் மக்களிடம் கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கையே யூத மதம் என்று யூதர்கள் கருதுகின்றனர். தோரா என்பது டனாக் அல்லது எபிரேய வேதாகம என்ற பெரிய உரையின் ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் தல்மூத் போன்ற பாரம்பரியமும், வாய்வழி தொகுப்புகளும் அடங்கிய துணை நூல்களும் உள்ளன. உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் பின்பற்றுபவர்களைக் கொண்ட யூத மதம் உலகின் பத்தாவது பெரிய சமயமாக இருக்கிறது.
யூதம் Judaism | |
யூத சடங்குக் கலை (மேலிருந்து வலஞ்சுழியாக): ஓய்வு நாள் மெழுகுதிரி நிலைச்சட்டம், கையை கழுவும் கிண்ணம், அச்சும் டனாக்கும், தோரா சுட்டிக்காட்டி, ஷோபார் மற்றும் கிச்சிலிப்பழப் பெட்டி | |
வகைப்பாடு | ஆபிரகாமியம் |
---|---|
இறையியல் | ஏகத்துவம் |
புவியியல் பிரதேசம் | இசுரேலில் முதன்மைச் சமயம், சிறுபான்மையினராக உலகம் முழுவதும் பரவியுள்ளது |
நிறுவனர் | ஆபிரகாம் (மரபுவழி) |
ஆரம்பம் | கிமு 6-ஆம் நூற்றாண்டு கிமு 20–18-ஆம் நூற்றாண்டு (மரபு) யூதேயா மெசொப்பொத்தேமியா (மரபு) |
பிரிந்தது | யாவியம் |
பிரார்த்தனைக் கூட்டங்கள் | யூத சமய சமூகங்கள் |
உறுப்பினர்கள் | அண். 14–15 மில்லியன் |
மறை பரப்புனர்கள் | ராபிகள் |
மரபுவழி யூதமானது, தோரா யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள் தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது, யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.
யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதத்தை விட அதிக அளவு "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும். அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது. வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள முடியாது. புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.
யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது.[1] வெண்கலக் காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளில், யூதம் ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது.[2] யூதம், ஒரு கடவுட் கொள்கை கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[3] எபிரேயர் மற்றும் இசுரயேலர்களைக் குறிக்கும் விதம்:
* எபிரேய வேதாகமம் புத்தகத்தில், யூதர்கள்.
* எஸ்தர் புத்தகத்தில், யூதர்கள்.
* மற்ற புத்தகங்களில் யூதர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக "இஸ்ரேல் நாட்டின் பிள்ளைகள்".
யூத மதத்தின் நூல்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளால் வசப்படுத்தப்பட்ட பிற மதங்கள்:
* ஆபிரகாமிய சமயங்கள்
* கிறிஸ்தவம்
* இசுலாம்
* பகாய் சமயம்.
யூத மதத்தின் பல அம்சங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதச்சார்பற்ற மேற்கத்திய நன்னெறிகளையும், சிவில் சட்டங்களையும் தாக்கின. ஹீப்ராயிசம் முக்கிய காரணியாகக் கருதப்படக் காரணங்கள்:
* மேற்கத்திய நாகரிகம், எலனியக் காலம் வளர்ச்சி அடைந்தது
* யூதவியல் வளர்ச்சி
* கிறிஸ்தவத்தின் தாய் மதம்
* கிறிஸ்தவ சகாப்தத்தில் மேற்கத்திய இலட்சியங்கள் மற்றும் அறநெறிகள் கணிசமாக வடிவமைக்கப்பட்டன.[4]
யூதர்கள் சாதி ஒழிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள். யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றும் யூத மதத்துக்கு மாறியவர்கள் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டனர். 2015 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 14.3 மில்லியனாக இருந்தது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 0.2% ஆகும்.[5]
43% யூதர்கள் இசுரேலில் வசிக்கின்றனர். 43% யூதர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்களில், பெரும்பாலானோர் ஐரோப்பாவில் வசிக்கின்றனர். எஞ்சியுள்ள சிறுபான்மை குழுக்கள், தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவலாக வசிக்கின்றனர்.