பேர்கன் நகர நிர்வாகம்
From Wikipedia, the free encyclopedia
பேர்கன் (Bergenⓘ) நோர்வேயில் இரண்டாவது பெரிய நகரமாகும். பண்டைய காலத்தில் அரசாட்சி முறையில் ஆளப்பட்டு வந்த இந்நகராட்சி, பின்னர் அரசாட்சி முறையை இழந்து நாடாளுமன்ற நடைமுறைக்கு வந்தது. ஜூன் 2000 ஆம் ஆண்டு முதல் பேர்கன் நாடாளுமன்ற நடை முறையை அடிப்படையாகக் கொண்ட நகராட்சி முறையிலான நிர்வாகத்தைக் கொண்டிருக்கிறது[1]. நகர மன்றத்தினால் தெரிவுசெய்து அமர்த்தப்படும் ஆணையர்கள் (Commisioners) என அழைக்கப்படும் ஏழு அரசாங்க அங்கத்துவர்களே நகரத்திற்கான உயர் அதிகாரத்தைக் கொண்டவர்களாவர். நகர அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் (Chief Commisioner), 25 ஏப்ரல் 2019 இலிருந்து, ரோகர் வல்ஹம்மெர் (Roger Valhammer) என்பவர்[2]இருக்கிறார். ஒக்டோபர் 2015 - செப்டெம்பர் 2021 இற்கான நகர முதல்வராக (Mayor) மார்த்தே மியூஸ் பேர்சென் (Marte Mjøs Persen) என்பவர் இருந்தார். [3] தற்போதைய நகர முதல்வராக ரூன பாக்கர்வீக் Rune Bakervik 2013 வரை இருப்பார்.[4] பேர்கன் நகராட்சி உள்ளிட்ட வெஸ்ட்லான்ட் (Vestland) மாவட்டத்தின் மாவட்ட ஆணையராக (County Governer of Vestland) லார்ஸ் ஸ்பொன்ஹைம் (Lars Sponheim) என்பவர் இருக்கிறார்.