பேர்கன் நகரத்தில் கல்வி
From Wikipedia, the free encyclopedia
பேர்கன் (Bergenⓘ) நோர்வேயில் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கே இலவசக்கல்வி முறையே நடைமுறையில் உள்ளது. உயர்கல்வி கற்க இங்கிருந்து வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. அரசாங்க பாடசாலைகளில், கற்கும் மொழி நோர்வே மொழியாக இருப்பதுடன் இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகிறது. மூன்றாம் மொழி ஒன்றும் தெரிவுசெய்து கற்க வாய்ப்பளிக்கப்படுகிறது. அரசாங்கப் பாடசாலைகளிலேயே, வெளிநாட்டு பெற்றோரையுடைய குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழியைக் கற்கவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு, அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது, நோர்வேஜிய மொழியில் கல்விகற்ற கடினமாக இருக்கும் குழந்தைகளுக்கே இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுகிறது.
தமிழ்க் குழந்தைகளுக்கு சனிக்கிழமைகளில் தமிழ்ப் பாடசாலையும் இயங்கி வருகின்றது.