லினோலெயிக் அமிலம்
From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:Chembox CMC HLB (set)
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஒருபக்க, ஒருபக்க-9,12-ஆக்டாடெகாடையீனோயிக் அமிலம்[1] | |
வேறு பெயர்கள்
கொழுமிய எண்: C18:2 | |
இனங்காட்டிகள் | |
60-33-3 Y | |
ChEBI | CHEBI:17351 N |
ChEMBL | ChEMBL267476 Y |
ChemSpider | 4444105 Y |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C01595 Y |
| |
UNII | 9KJL21T0QJ Y |
பண்புகள் | |
C18H32O2 | |
வாய்ப்பாட்டு எடை | 280.45 g·mol−1 |
தோற்றம் | வண்ணமற்ற எண்ணெய் |
அடர்த்தி | 0.9 கி/செமீ 3[2] |
உருகுநிலை | −5 °செ (23 °ஃபா) [3] −12 °செ (10 °ஃபா)[2] |
கொதிநிலை | 230 °C (446 °F) - 21 மில்லி பார்[3] 230 °C (446 °F) -16 மிமீ பாதரசம்[2] |
0.139 மிகி/லி[3] | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 112 °C (234 °F)[3] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
லினோலெயிக் அமிலம் [Linoleic acid (LA)] ஒரு நிறைவுறா ஒமேகா-6 (n-6) கொழுப்பு அமிலமாகும். அறைவெப்பநிலையில் இது வண்ணமற்ற திரவமாக உள்ளது. இதனுடைய கொழுமிய எண்: 18:2(n-6). லினோலெயிக் அமிலம் பதினெட்டு கார்பன் அணுக்களையும், இரண்டு ஒருபக்க இரட்டைப் பிணைப்புகளையும் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும்; மீத்தைல் முனையிலிருந்து கணக்கிடும்போது உள்ள ஆறாவது கார்பன் அணுவில் முதலாவது இரட்டைப் பிணைப்பு உள்ளது[4].
லினோலெயிக் அமிலம் மனிதர்களும், விலங்குகளும் பல்வேறு உயிரியல் பணிகளைச் செய்ய தேவையான, பிற தளப்பொருள்களிலிருந்து தேவையான அளவு உருவாக்க முடியாத, உணவிலிருந்து கிடைக்க வேண்டிய அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களின் இரண்டு குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தது[5].
பல்நிறைவுறா கொழுப்பு அமிலமான லினோலெயிக் அமிலம், அராகிடோனிக் அமிலம் (AA) உயிரித்தொகுப்பிலும், அதன் மூலமாக சில புரோஸ்டாகிளாண்டின்களின் (PG) உயிரித்தொகுப்பிலும் உபயோகப்படுகிறது. லினோலெயிக் அமிலம் செல்சவ்வுகளின் கொழுமியத்தில் காணப்படுகிகிறது. பல தாவர எண்ணெய்களில் (கசகசா, குசம்பப்பூ எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோள எண்ணெய்) இந்த அமிலம் ஏராளமாக (எடையில் பாதிக்கும் மேலாக) உள்ளது[6].
உடல் நலத்திற்கு இன்றியமையாக் கொழுப்பு அமிலமான லினோலெயிக் அமிலம் தேவைப்படுகின்றது. ஆய்வுகளில், லினோலெயிக் அமிலக் குறைபாடு கொண்ட உணவினை உட்கொண்ட எலிகள் மிதமான தோல் தடித்தல், முடி உதிர்வு[7] மற்றும் குறைந்த காயம் ஆறும் தன்மையினைக் கொண்டிருந்தன[8]. ஆனால், சாதாரணமாக உட்கொள்ளும் உணவின் மூலமாகவே நமக்குத் தேவையான லினோலெயிக் அமிலம் கிடைத்து விடுவதால் இதன் குறைபாடு என்பது மிக அரிதாகும். எனவே, மருத்துவத்தை நாடும் நிலைமைக் கிடையாது.
ஒலெயிக் அமிலத்துடன் லினோலெயிக் அமிலத்தையும் கரப்பான் பூச்சிகள் இறக்கும்போது, பிற கரப்பான்கள் அந்தப் பகுதிக்கு வருவதைத் தடுக்க, வெளிவிடுகின்றன. இதைப்போலவே எறும்புகளும், தேனீக்களும் இறக்கும்போது ஒலெயிக் அமிலத்தை வெளிவிடுகின்றன[9].