ஆய்வு
From Wikipedia, the free encyclopedia
ஆய்வு (ஒலிப்புⓘ) (Research) என்பது ஓர் அறிவுத்தேடல்/அறிவியல் தேடல் எனலாம். மதியால் செயலாக்கப்படும் ஆய்வுகள் புதிய அறிதல்களையும் புரிதல்களையும் உள்ளடக்கும். இவை பெரும்பாலும் அறிவியல் முறைசார்ந்து இயங்குகின்றன.[1][2][3]
ஆய்வுகளின் அடிப்படைத் தேவை பயனுள்ள ஆராய்ச்சி, அதில் கண்டுபிடிப்புகள், விளக்கங்கள், புதிய முறைகளை கையாளுதல் மற்றும் கண்டறிதல் ஆகியன. குறிப்பாக அறிவியல் படைப்புகள் மற்றும் வளர்ச்சி சார்ந்தே இவ்வாய்வுகள் இயங்குகின்றன.