2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக XVIII (18) வது ஆசிய விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜகார்த்தா மற்றும் பலெம்பாங் நகரங்களில் நடைபெற்றதால், இந்தப் போட்டி ஜகார்த்தா பலெம்பாங் 2018 போட்டி என்றும் அழைக்கப்பட்டது. இந்த பான் ஆசியன் பல்துறை விளையாட்டு போட்டிகள் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங் நகரங்களில் 18 ஆகத்து 2018 இல் தொடங்கி 2 செப்டம்பர் 2018 அன்று முடிவடைந்தது.
XVIII ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | |
---|---|
நடத்திய நகரம் | ஜகார்த்தா மற்றும் பலெம்பாங், இந்தோனேசியா[1] |
குறிக்கோள் வசனம் | "Energy of Asia"[2] (இந்தோனேசிய மொழி: Energi Asia) |
பங்கெடுத்த நாடுகள் | 45 |
நிகழ்வுகள் | 465 போட்டிகள், 40 வகையான விளையாட்டுக்கள் |
துவக்க விழா | 18 ஆகத்து[3] |
நிறைவு விழா | 2 செப்டம்பர் |
முதன்மை அரங்கம் | கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கம்[4] |
அதிகாரபூர்வ வலைத்தளம் | Official website |
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக இரு நகரங்களில் ஒரே நேரத்தில் போட்டிகள் நடைபெறுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 1962 ஆண்டிற்குப் பிறகு இந்தப் போட்டிகள் இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமாத்திரா பிராந்தியத்தின் தலைநகரமான பலெம்பாங் ஆகிய இரண்டு நகரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இதோடு மேற்கு ஜாவா மற்றும் பண்டன் பிராந்தியங்களின் தலைநகரமான பண்டுங் நகரத்திலும் சிலப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டின் ஆரம்ப விழா மற்றும் முடிவு விழா அனைத்தும் ஜகார்த்தாவில் உள்ள கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.