ஜகார்த்தா
இந்தோனேசியாவின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
சகார்த்தா அல்லது சகார்த்தா சிறப்புத் தலைநகரப் பகுதி (ஆங்கிலம்: Jakarta அல்லது Special Capital Region of Jakarta; இந்தோனேசியம்: Jakarta அல்லது Daerah Khusus Ibukota Jakarta) என்பது இந்தோனேசியாவின் தலைநகரம் ஆகும். முன்பு ஒல்லாந்து (Holland) என்று அழைக்கப்பட்ட நெதர்லாந்து நாட்டின் ஆட்சிக் காலத்தில் இந்த நகரம் பத்தேவியா (Batavia) என்று அழைக்கப்பட்டது.
சகார்த்தா Jakarta | |
---|---|
சிறப்பு தலைநகரப் பகுதி | |
Daerah Khusus Ibukota Jakarta | |
ஆள்கூறுகள்: 6°12′S 106°49′E | |
நாடு | இந்தோனேசியா |
நிருவாகம் | பட்டியல்
|
அரசு | |
• ஆளுனர் | அனிசு பாசுவேடான் Anies Baswedan |
• துணை ஆளுனர் | அகமது ரிசா பத்ரியா Ahmad Riza Patria |
பரப்பளவு | |
• சிறப்பு தலைநகரப் பகுதி | 664.01 km2 (256.38 sq mi) |
• நகர்ப்புறம் | 3,540 km2 (1,367 sq mi) |
• மாநகரம் | 7,062.5 km2 (2,726.8 sq mi) |
ஏற்றம் | 8 m (26 ft) |
மக்கள்தொகை (2020) | |
• சிறப்பு தலைநகரப் பகுதி | 1,05,62,088 |
• அடர்த்தி | 15,906.5/km2 (41,198/sq mi) |
• நகர்ப்புறம் | 3,45,40,000 |
• பெருநகர் | 3,34,30,285 |
• பெருநகர் அடர்த்தி | 4,733/km2 (12,260/sq mi) |
Area code | +62 21 |
வாகனப் பதிவு | B |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | 2019 |
- மொத்தம் | ரூப்பியா 2,840.8 திரில்லியன் டாலர் $ 200.9 billion டாலர் $ 660.3 பில்லியன் (கொள்வனவு ஆற்றல் சமநிலை) |
- தனிநபர் | ரூப்பியா 269,074 ஆயிரம் டாலர் $ 19,029 டாலர் $ 55,184 (கொள்வனவு ஆற்றல் சமநிலை) |
- வளர்ச்சி | 5.9% |
HDI (2021) | 0.811[2] |
முக்கிய வானூர்தி நிலையங்கள் | சுகர்ணோ-கத்தா (CGK) அலிம் பெர்டானா குசுமா பன்னாட்டு வானூர்தி நிலையம் (HLP) |
தொடருந்து சேவை | |
விரைவு தொடருந்து | |
இணையதளம் | jakarta |
புராதன மீன்பிடிக் கிராமமாக இருந்து வளர்ச்சி பெற்ற இந்த நகரம் இன்று உலகின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
பண்டைய இசுலாமிய சுலுத்தான் ஒருவர் இந்த நகரை வெற்றி கொண்டபோது வெற்றியின் நகரம் எனப் பொருள்படும் சயகர்த்தா எனப் பெயரிட்டிருந்தார். அதனை அடிப்படையாக வைத்தே இதன் பெயர் சகார்த்தா ஆகியிருக்கிறது.
இந்நகரின் இன்றைய மக்கள் தொகை கிட்டத்தட்ட 35 மில்லியன் எனவும் தினசரி வேலைகளுக்காக வெளியிடங்களில் இருந்து வந்து தங்கியிருப்பவர்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 16 மில்லியனுக்கு மேல் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.