ஆர்யா
தமிழ்த் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ஆர்யா (பிறப்பு:11 திசம்பர் 1980) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் மார்ச் 10, 2019 அன்று திருமணம் நடந்தது.[1][2][3][4]