இனப்பெருக்கத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
இனப்பெருக்கத் தொகுதி (Reproductive system) என்பது அனைத்து உயிரினங்களும் தங்களது உயிரினத் தொகையினை தற்காத்துக் கொள்வதற்காக ஈடுபடும் பாலியல் இனப்பெருக்க செயல்பாட்டிற்கு உதவும் உறுப்புக்களின் தொகுதியாகும். நீர்மங்கள், இயக்குநீர்கள், ஃபெரமோன்கள் போன்ற பல உயிரற்றப் பொருட்களும் பாலியல் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய அங்கங்களாக உள்ளன.[1] பெரும்பாலான உடல் தொகுதிகள் போலன்றி, பாலினத்தால் வேறுபட்ட இனங்களின் பாலுறுப்புக்கள் பெரிதும் மாறுபட்டுள்ளன. இந்த வேறுபாடுகளால் இரு தனிநபர்களின் மரபார்ந்த பொருட்கூடுகையால் சந்ததியினரின் மரபணு தகுதி மேம்படுகின்றது.[2] எளிய உயிரினங்களாகிய பாக்டீரியங்கள் பாலில்லா இனப்பெருக்கத்தின் மூலம் ஒத்த மரபணுப்பண்புடைய உயிரினங்களைத் தோற்றுவிக்கின்றன.
விரைவான உண்மைகள் இனப்பெருக்கத் தொகுதி, விளக்கங்கள் ...
இனப்பெருக்கத் தொகுதி | |
---|---|
மனித ஆண் இனப்பெருக்கத் தொகுதி | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | systema reproductionis |
TA98 | A09.0.00.000 |
TA2 | 3467 |
உடற்கூற்றியல் |
மூடு