இரண்டாம் அல்-அலமைன் சண்டை
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் அல்-அலமைன் சண்டை (Second Battle of El Alamein) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதுவே மேற்குப் பாலைவன்ப் போர்த்தொடரின் திருப்புமுனையாக அமைந்தது. இதில் நேச நாட்டுத் தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரியின் படைகள் ஜெர்மானிய தளபதி ரோம்மலின் தலைமையிலான அச்சுப் படைகளின் கிழக்கு நோக்கி முன்னேற்றத்தை அடியோடு முறியடித்தன. இச்சண்டையில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் சூயசு கால்வாயைக் கைப்பற்றும் அச்சு நாட்டு மேல்நிலை உத்தி வெற்றிபெற வாய்ப்பில்லாமல் போனது. இச்சண்டையே வடக்கு ஆப்பிரிக்க களத்தில் அச்சுப் படைகளின் தோல்வியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.
இரண்டாம் அல்-அலமைன் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி | |||||||
தாக்கும் பிரித்தானியக் காலாட்படை வீரர்கள் (அக்டோபர் 23, 1942) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேச நாடுகள்: ஐக்கிய இராச்சியம் ஆஸ்திரேலியா நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு விடுதலை பிரான்ஸ் கிரேக்க நாடு | அச்சு நாடுகள்: நாசி ஜெர்மனி இத்தாலி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஹரால்ட் அலெக்சாந்தர் பெர்னார்ட் மோண்ட்கோமரி | எரிவின் ரோம்மல் கேயார்க் ஸ்டம் † எட்டோரே பாஸ்டிக்கோ |
||||||
பலம் | |||||||
195,000 பேர்[1] 1,029 டாங்குகள் 435 கவச ஊர்திகள்[1] 730 – 750 வானூர்திகள் (530 இயங்கு நிலையில்) 892[2] – 908 பீரங்கிகள்[1] | 116,000 பேர்[3] 547 டாங்குகள் 192 கவச ஊர்திகள் 770 – 900 வானூர்திகள் (480 இயங்கு நிலையில்) |
||||||
இழப்புகள் | |||||||
13,560 பேர் 332 – ~500 டாங்குகள் 111 பீரங்கிகள் 97 வானூர்திகள் | 30,542 பேர் ~500 tanks 84 வானூர்திகள் |