இரத்தப் புற்றுநோய்
From Wikipedia, the free encyclopedia
இரத்தப் புற்றுநோய் அல்லது குருதிவெண் புற்று (Leukemia) அல்லது leukaemia /luːˈkiːmiːə/ எனவும் [1] loo-KEE-mee-ə எனவும் பலுக்கும் வெண்குருதிக் கலப்புற்று இரத்தப் புற்றுவகைகளில் ஒரு குழுவாகும். இது எலும்புநல்லியில் தோன்றி இயல்பற்ற பலவகை இரத்த உயிர்க்கலங்களை உருவாக்குகிறது.[9] இந்த இரத்த உயிர்க்கலங்கள் முழுவளர்ச்சி அடையாததால் முந்துநிலை உயிர்க்கலங்கள் அல்லது முகைகள் அல்லது வெண்புற்று உயிர்க்கலங்கள் எனப்படுகின்றன.[2] குருதிக் கசிவு, கன்றிய கீறல், சோர்வு, காய்ச்சல், தொற்று இடர் வாய்ப்பு கூடுதல்னஆகியன நோய் அறிகுறிகளாக அமைகின்றன.[2] இயல்பான உயிர்க்கல்ங்கல் இல்லாமையால் இந்த நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன.[2] நோயறிதல் குருதி ஓர்வுகள், எலும்புநல்லி இழையப் பகுப்பாய்வு ஆகிய மருத்துவ ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்யப்படும்.[2]
இரத்தப் புற்றுநோய் Leukaemia | |
---|---|
ஒத்தசொற்கள் | குருதிப்புற்று, வெள்ளணுப் புற்று, வெண்குருதிக்கலப் புற்று |
முந்துநிலை B-உயிர்க்கலக் கடும் நிணநீர்முகை வெண்புற்றுள்ள நோயாளியில் உவிரைட் எடுத்த தூளாக்கிய எலும்புநல்லி பதக்கூறு. | |
பலுக்கல் | |
சிறப்பு | குருதியியல், புற்றியல் |
அறிகுறிகள் | குருதிக் கசிவு, கன்றிய கீறல், சோர்வு, காய்ச்சல், தொற்று இடர் வாய்ப்பு கூடுதல்[2] |
வழமையான தொடக்கம் | அனைத்தகவைகளிலும்,[3] 69 களிலும் 70 களிலும் மிக வழக்கமானவை.[4] இது குழந்தைகளில் காணப்படும் பரவலான வீறுள்ள புற்றாகும்; அதே நேரம் இதன் நோய்த்தணியும் வீதமும் கூடுதலாக அமைகிறது. |
காரணங்கள் | மரபுவழி, சுற்றுச்சூழல் காரணிகள்[5] |
சூழிடர் காரணிகள் | புகைபிடித்தல், குடும்ப வரலாறு, மின்னணுவாக்கக் கதிவீச்சு, சில வேதிமங்கள், முந்தைய வேதிம மருத்துவ ம், டவுன் நோய்த்தொகை.[3][5] |
நோயறிதல் | குருதி ஓர்வுகள், எலும்புநல்லி இழையப் பகுப்பாய்வு[2] |
சிகிச்சை | வேதிம மருத்துவம், கதிர்வீச்சு மருத்துவம், குறிப்பிட்ட இலக்குசார் மருத்துவம்மெலும்புநல்லி பதிலீடு, ஆதரவு நல்கல்[3][6] |
முன்கணிப்பு | ஐந்தாண்டு பிழைப்பு வீதம் 57% ( ஐக்கிய அமெரிக்கா)[4] |
நிகழும் வீதம் | 2.3 மில்லியன் (2015)[7] |
இறப்புகள் | 353,500 (2015)[8] |
வெண் குருதிக்கலப் புற்றுக்கான காரணம் அறியப்படவில்லை.[5] மரபுக் காரணிகளும் சுற்றுச்சூழல் காரணிகளும் சேர்ந்து செயல்படுவதாகக் கருதப்படுகிறது.[5] இடர்க்காரணிகளாக, புகைபிடித்தல், மிண்னணுவாக்கக் கதிர்வீச்சு,பென்க்சீன் போன்ற சில வேதிமங்கள், முந்துநிலை வேதிம மருத்துவம், டவுன் நோய்த்தொகை ஆகியன கருதப்படுகின்றன.[3][5] இப்புற்றுக்கான குடும்ப மரபுள்ளவர்களில் உயர்நோயிடர் அமையும்.[3] இவற்றில் நான்கு முதன்மை வகைகளும் சில அரியவகைகளும் அமைகின்றன. நான்கு முதன்மை வகைகளாவன, கடும் நிணநீர்முகை வெண்குருதிப் புற்று, கடும் நிணநீரக வெண்குருதிப் புற்று, நாட்பட்ட நிணநீர்மமுகை வெண்குருதிப் புற்று, நாட்பட்ட நிணநீரக வெண்குருதிப் புற்று என்பனவாகும்.[3][10] குருதி, எலும்புநல்லி, நிணநீர் மண்டலத்தைத் தாக்கும் புற்றுகளின் பெருங்குழுவில் குருதிவெண்புற்றுகளும் நிணநீர் இழையப் புற்றுகளும் அமைகின்றன. இப்பெருங்குழு சார்ந்த புற்றுகள் குருதியாக்க, நிணநீரக இழையப் புற்றுகள் எனப்படுகிறது.[11][12]
நோயாற்றல் வேதிம மருத்துவம், கதிர்வீச்சு மருத்துவம்மிலக்குசார் மருத்துவம், எலும்புநல்லி பதிலியாக்கம் போன்ற முறைகளின் தேவைப்படும் சேர்மானவழிகளில் செய்யப்படுகிறது. மேலும் ஆதரவும் அக்கறையும் மிகுந்த கவனிப்பும் கூடுதல்லாகத் தேவைப்படுகிறது.[3][6] சில வகை வெண் குருதிக்கலப் புற்றுகளை மிகவும் கவனமாகக் காத்திருந்து கையாலப்பட வேண்டியனவாக உள்ளன.[3] நோய்வகையையும் அகவையையும் பொறுத்தே நோயாற்றலில் வெற்றி கிடைக்கிறது. வளரும் நாடுகளில் நோயாற்றல் நல்லமுறையில் மேம்பட்டுள்ளன.[10] அமெரிக்காவில், 5 அகவைக்கும் குறைந்த சிறுவர்களின் பிழைப்பு வீதம் 65% ஆக உள்ளது.[4] முதல்தர நாடுகளில் 15 அகவைக்கும் குறைந்த சிறுவர்களின் பிழைப்பு வீதம் இந்நோயின் வகையைப் பொறுத்து 60% , ஏன் 90% அளவினும் கூடுதலாக உள்ளது.[13] ஐந்தாண்டுகளில் நோய் திரும்ப வராத கடும் வெண் குருதிக்கலப் புற்று வந்த சிறுவர்களில் நோய் பிறகு எப்போதுமே மீள வாய்ப்பில்லை.[13]
2015 ஆம் ஆண்டில் குருதிவெண்புற்று உலகளவில் 2.3 மில்லியன் மக்களுக்கு ஏற்பட்டு, அவர்களில் 353,500 பேர் இறந்துவிட்டனர்.[7][8] 2012 ஆம் ஆண்டில் புதிதாக இந்நோய் 352,000 பேருக்கு ஏற்பட்டது.[10] இந்நோய் சிறுவர்களிலேயே பரவலாக ஏற்படுகிறது; இவர்களி நான்கில் மூன்று பகுதியினருக்கு கடும் நிணநீர்முகை குறுதிப் புற்ரே பெரிதும் தாக்குகிறது.[3] அகவை முதிந்தவரில் நாட்பட்ட நிணநீர்ம குருதி வெண்புற்றும் கடும் எலும்புநல்லியக குருதி வெண்புற்றுமே பரவலாக அமைய, அனைத்துவகை வெண்குருதிக்கலப் புற்றும் சேர்ந்து 90% பேரைத் தாக்குகிறது.[3][14] இந்நோய் வளர்ந்த நாடுகளிலேயே பரவலாக ஏற்படுகிறது.[10]