இடச்சு மக்கள்
From Wikipedia, the free encyclopedia
ஒல்லாந்தர் அல்லது இடச்சு மக்கள் (Dutch, இடச்சு: Nederlandersⓘ), அல்லது நெதர்லாந்தர் (Netherlanders) எனப்படுவோர் நெதர்லாந்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு செருமானிக் இனக் குழு ஆகும்.[15][16][17][18][19] இடச்சு மொழியைப் பேசும் இவர்கள் ஒரு பொதுப் பண்பாட்டைப் பேணி வருகின்றனர். இடச்சு மக்களும் அவர்களது சந்ததியினரும் உலகளாவிய குடியேற்ற சமூகங்களில், குறிப்பாக அரூபா, சுரிநாம், கயானா, குராசோ, அர்கெந்தீனா, பிரேசில், கனடா,[20] ஆத்திரேலியா,[21] தென்னாப்பிரிக்கா,[3] நியூசிலாந்து, அமெரிக்கா.[22] ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.
மொத்த மக்கள்தொகை | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அண். 28–29 மில்லியன்[1] | |||||||||||||||||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||||||||||||||||||||||
நெதர்லாந்து 13,226,829[2] (ethnic Dutch and Frisians) | |||||||||||||||||||||||||
தென்னாப்பிரிக்கா | 7,000,000[lower-alpha 1] (இடச்சு வம்சாவளி)[3] | ||||||||||||||||||||||||
ஐக்கிய அமெரிக்கா | 4,533,617 (இடச்சு வம்சாவளி)[4] | ||||||||||||||||||||||||
பிரான்சு | 1,000,000 (இடச்சு வம்சாவளி)[5] | ||||||||||||||||||||||||
கனடா | 1,000,000 (இடச்சு வம்சாவளி)[5] | ||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
மொழி(கள்) | |||||||||||||||||||||||||
இடச்சு இலிம்பூர்கு மேற்கு பிரீசியம் (பிரீசியர்) ஆபிரிக்கான மொழி (ஆப்ரிகானர்) கீழ் சாசிய தச்சு மொழி | |||||||||||||||||||||||||
சமயங்கள் | |||||||||||||||||||||||||
வரலாற்று ரீதியாக: பெரும்பான்மையானோர் சீர்திருத்தத் திருச்சபை[lower-alpha 2] சிறுபான்மை கத்தோலிக்க திருச்சபை இன்று:[14] பெரும்பான்மை சமயமற்றோர் கிறித்தவ சிறுபான்மையினர்[lower-alpha 3] | |||||||||||||||||||||||||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |||||||||||||||||||||||||
other செருமானிக் மக்கள்s (குறிப்பாக ஆப்ரிகானர், பிளமிங்குகள், பிரீசியர்கள்) |
ஐரோப்பாவின் நடுக்காலப் பகுதியில், தாழ்ந்த நாடுகள் பிரான்சுக்கும், புனித உரோமைப் பேரரசுக்கும் இடையே எல்லைப் பகுதியில் இருந்தன. இவற்றின் பல்வேறு பிராந்தியங்களும் 13-ஆம் நூற்றாண்டு அளவில் தனியான சுயாட்சியுடன் கூடிய நாடுகளாயின.[23] ஆப்சுபர்குகளின் கீழ், நெதர்லாந்து ஒரு தனி நிருவாகத்தின் கீழ் ஒருங்கிணைந்தது. 16-ஆம், 17-ஆம் நூற்றாண்டுகளில் வடக்கு நெதர்லாந்து எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்று இடச்சுக் குடியரசு ஆனது.[24] இருந்தாலும், டச்சு சமூகத்தின் உயர்ந்த சிறப்பு நகரமயமாக்கல் சிறப்பியல்பு ஒப்பீட்டளவில் முன்கூட்டியே இடம்பெற்றிருந்தது.[25] குடியரசுக் காலத்திலேயே முதல் கட்ட இடச்சுக் குடியேற்றங்கள் ஐரோப்பாவிற்கு வெளியே இடம்பெற்றன.
இடச்சு மக்கள் பொதுவாகவே முதலாளித்துவ சமூகத்தின் முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றனர். அத்துடன் நவீன பொருளாதாரம், சமய சார்பின்மை, கட்டற்ற சந்தைமுறை போன்றவற்றால் மேற்குலகின் சக்திகளில், குறிப்பாக பிரித்தானியப் பேரரசு, மற்றும் அவர்களது பதின்மூன்று குடியேற்றங்கள் ஆகியவற்றில் பெரும் செல்வாக்கு படைத்திருந்தனர்.
இடச்சு பாரம்பரிய கலை, கலாச்சாரம் நாட்டார் பாடல், நடனங்கள், கட்டிடக்கலைப் பாணிகள், உடைகள் போன்ற பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. இவற்றில் பல உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். இடச்சு ஓவியர்கள், குறிப்பாக ரெம்பிரான்ட், யொஹான்னெஸ் வெர்மீர், வின்சென்ட் வான் கோ ஆகியோர் உலக அளவில் பெரிதும் புகழப்பட்டவர்கள். இடச்சுக்களின் முக்கிய சமயம் கிறிஸ்தவம் (கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து) ஆகும். ஆனாலும், இன்றைக காலத்தில் பெரும்பான்மையானோர் சமய சார்பற்றவர்களாக உள்ளார்கள். இடச்சுக்களில் பெருமாலானோர் மானுடம், அறியவியலாமைக் கொள்கை, இறைமறுப்பு அல்லது தனிமனிதத்துவம் ஆகியவற்றுக்கு ஆரவாக உள்ளனர்.[26][27]