கோபால்கஞ்ச் மாவட்டம், வங்காளதேசம்
வங்காளதேசத்தின் தகா கோட்டத்திலுள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோபால்கஞ்ச் மாவட்டம் (Gopalganj district) (வங்காள மொழி: গোপালগঞ্জ জেলা) தெற்காசியாவின் தெற்கு வங்காளதேசத்தின் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் வங்காள தேசத்தின் மாவட்டங்களில் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] 1,490 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 11,72,415 ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோபால்கஞ்ச் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் பரித்பூர் மாவட்டம், தெற்கில் பிரோஜ்பூர் மாவட்டம் மற்றும் பேகர்ஹாட் மாவட்டமும், கிழக்கில் மதாரிபூர் மாவட்டம் மற்றும் பரிசால் மாவட்டங்களும் மற்றும் மேற்கில் நராயில் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.