டான் பிராட்மன்
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன் (Sir Donald George "Don" Bradman 27 ஆகத்து 1908 – 25 பிப்ரவரி 2001) தெ டான் எனவும் அழைக்கப்படும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் ஆவார். துடுப்பாட்ட வரலாற்றிலேயே மிகச்சிறந்த மட்டையாளர் என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுபவர்.[3] பிராட்மனின் தேர்வுத் துடுப்பாட்ட 99.94 என்பது புள்ளிவிவரப்படி, முக்கிய விளையாட்டுகள் அனைத்திலும் உயரிய சாதனையாகக் கருதப்படுகிறது.[4]
1930-இல் பிராட்மன் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டொனால்டு சியார்ச் பிராட்மன் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | (1908-08-27)27 ஆகத்து 1908 கூட்டமாண்ட்ரா, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 25 பெப்ரவரி 2001(2001-02-25) (அகவை 92) கென்சிங்டன் பார்க், தெற்கு ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் |
| |||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.70[1][2] m (5 அடி 7 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நேர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் |
| |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 124) | 30 நவம்பர் 1928 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 18 ஆகத்து 1948 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1927/28–1933/34 | நியூ சவுத் வேல்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
1935/36–1948/49 | சதேர்ன் ரெட்பாக்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 4 திசம்பர் 2014 |
துவக்கத்தில் பிராட்மன் அச்சுப்பொறி உருண்டை மற்றும் குச்சம் வைத்து விளையாடியதாக ஆத்திரேலியாவில் கதைகள் உண்டு.[5] இவர் இரண்டே ஆண்டுகளில் புல் தரை துடுப்பாட்டத்திலிருந்து ஆத்திரேலிய அணியின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் சேர்ந்தார். தனது இருபத்தி இரண்டாம் பிறந்த நாளுக்கு முன்பாக இவர் பல சாதனைகளை நிகழ்த்தினார் குறிப்பாக அதிக ஓட்டங்கள் எடுப்பதில். இவரின் பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. பெரும் பொருளியல் வீழ்ச்சி காலத்தில் ஆத்திரேலிய விளையாட்டு உலகத்தின் இலட்சிய மனிதராகப் பார்க்கப்பட்டார்.
இவரின் இருபது வருட துடுப்பாட்ட வரலாற்றில் நிலையான ஓட்டங்களை எடுத்துள்ளார். இதனைப் பற்றி ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் அணித் தலைவர் பில் உட்ஃபுல் என்பவர் கூறுகையில் பிராட்மன் மூன்று ஆத்திரேலிய விரர்களுக்குச் சமம் என இவரைப் பாராட்டியுளார்.[6]
இவரின் ஓய்விற்குப் பிறகும் கூட முப்பது ஆண்டு காலங்கள் நிர்வாக இயக்குநர், தெரிந்தெடுப்பி, எழுத்தாளராக இருந்தார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஐம்பது ஆண்டுகள் கழித்து 2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் இருபத்தி ஐந்தாவது பிரதமரான ஜோன் ஹவார்ட் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் மிகச்சிறந்தவர் என பிராட்மனைப் பாராட்டினார்.[7]
இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக இவர் வாழ்ந்த காலகத்திலேயே இவரின் உருவப்படம் பொறித்த நாணயம்,வில்லை , அருங்காட்சியகம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இவர் பிறந்து நூறாண்டுகள் ஆனதையொட்டி ஆகஸ்டு 27, 2008 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ராயல் மின்ட்டானது பிராட்மனின் உருவம் பொறித்த $5 மதிப்புள்ள தங்க நாணயத்தை வெளியிட்டது.[8] 2009 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஹால் ஆஃப் ஃபேமாக (புகழ் பெற்ற மனிதராக) அறிவித்தது.