புதன் (கோள்)
ஞாயிற்றுக் குடும்பத்தில் மிகச்சிறிய மற்றும் ஞாயிறுக்கு மிகவும் அருகிலுள்ள கோள் / From Wikipedia, the free encyclopedia
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். இதற்கு இயற்கை நிலவுகள் எதுவும் அறியப்படவில்லை. [lower-alpha 1] இந்தக் கோளுக்கு மேற்கத்தியப் பண்பாட்டில் உரோமை தூதுக் கடவுளான மெர்க்குரியின் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டில் அறிவுக்கு காரணமாகும் புதன் என்ற கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மெசஞ்சர் (விண்கலம்) (2008) இல் எடுத்த புதன் கோள் , வண்னத்தில் |
||||||||||
காலகட்டம்J2000 | ||||||||||
சூரிய சேய்மை நிலை |
|
|||||||||
சூரிய அண்மை நிலை |
|
|||||||||
அரைப்பேரச்சு |
|
|||||||||
மையத்தொலைத்தகவு | 0.205 630[2] | |||||||||
சுற்றுப்பாதை வேகம் |
|
|||||||||
சூரியவழிச் சுற்றுக்காலம் | 115.88 d[2] | |||||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 47.362 km/s[2] | |||||||||
சராசரி பிறழ்வு | 174.796° | |||||||||
சாய்வு |
|
|||||||||
Longitude of ascending node | 48.331° | |||||||||
Argument of perihelion | 29.124° | |||||||||
துணைக்கோள்கள் | None | |||||||||
சிறப்பியல்பு
| ||||||||||
சராசரி ஆரம் | ||||||||||
தட்டையாதல் | 0[4] | |||||||||
புறப் பரப்பு |
|
|||||||||
கனஅளவு |
|
|||||||||
நிறை |
|
|||||||||
அடர்த்தி | 5.427 g/cm3[3] | |||||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் |
|
|||||||||
விடுபடு திசைவேகம் | 4.25 km/s[3] | |||||||||
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் |
|
|||||||||
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் | 10.892 km/h (3.026 m/s) | |||||||||
அச்சுவழிச் சாய்வு | 2.04′ ± 0.08′ (to orbit)[6] (0.034°)[2] |
|||||||||
வடதுருவ வலப்பக்க ஏற்றம் |
|
|||||||||
வடதுருவ இறக்கம் | 61.45°[2] | |||||||||
எதிரொளி திறன் | ||||||||||
மேற்பரப்பு வெப்பநிலை 0°N, 0°W [8] 85°N, 0°W[8] |
| |||||||||
தோற்ற ஒளிர்மை | −2.6[9] to 5.7[2] | |||||||||
கோணவிட்டம் | 4.5–13″[2] | |||||||||
பெயரெச்சங்கள் | Mercurian, Hermian | |||||||||
வளிமண்டலம்[2]
| ||||||||||
பரப்பு அழுத்தம் | சுவடாகச் சிறிதளவு | |||||||||
வளிமண்டல இயைபு |
|
சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை (angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.
புதனில் சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் மற்றெந்தக் கோள்களையும் விட புதனின் கோள்பரப்பு பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது; கோள்நடுக்கோடு அருகே பகல் நேரத்தில் 700 K (427 °C; 800 °F) ஆகவும் இரவுநேரத்தில் 100 K (−173 °C; −280 °F) ஆகவும் உள்ளது. முனையங்களில் (துருவங்களில்) எப்போதுமே குளிர்ச்சியாக 180 K (−93 °C; −136 °F) கீழுள்ளது. புதனின் அச்சு சூரியக் குடும்பத்திலேயே மிகக் குறைந்த சாய்வைக் (ஏறத்தாழ 1⁄30 பாகை) கொண்டுள்ளது. ஆனால் இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் மிகக் கூடியதாக உள்ளது. [lower-alpha 2] பெரும்பாலான மற்றக் கோள்களைப் போல இங்கு பருவங்கள் ஏற்படுவதில்லை. புதன் ஞாயிற்று அண்மைநிலையில் சூரியனிடமிருந்து இருக்கும் தொலைவை விட ஞாயிற்றுச் சேய்மைநிலையில் 1.5 மடங்குத் தொலைவில் உள்ளது.
புதன் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் தனித்துவமான முறையில் சூரிய ஈர்ப்பில் பிணைந்து சுற்றுகின்றது. நிலைத்த விண்மீன்களிலிருந்து காணும்நிலையில் தனது சுற்றுப்பாதையில் இரண்டு சுற்றுக்கள் வரும் காலத்தில் தன்னைச் சுற்றி மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது.[10] சுற்றுப்பாதையில் சுழலும் குறியீட்டச்சு கொண்டுள்ள சூரியனிலிருந்து காணும்போது, இரண்டு புதனாண்டுகளுக்கு ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்கின்றது. புதனில் இருக்கும் கூர்நோக்கருக்கு ஒருநாள் இரண்டு ஆண்டுகளாகும்.
தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு.
புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974–1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது.