வெள்ளி (கோள்)
ஞாயிற்றுக் குடும்பத்தில் ஞாயிறிலிருந்து இரண்டாவது கோள் / From Wikipedia, the free encyclopedia
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும்..[14][15] சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது கூடுதலான பைங்குடில் விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் ஆகும்.
A real-colour image of Venus taken by மரைனர் 10 processed from two filters. The surface is obscured by thick கந்தக டைஆக்சைடு clouds. |
||||||||||
காலகட்டம்J2000 | ||||||||||
சூரிய சேய்மை நிலை |
|
|||||||||
சூரிய அண்மை நிலை |
|
|||||||||
அரைப்பேரச்சு |
|
|||||||||
மையத்தொலைத்தகவு | 0.006772 [4] | |||||||||
சுற்றுப்பாதை வேகம் |
|
|||||||||
சூரியவழிச் சுற்றுக்காலம் | 583.92 days[2] | |||||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 35.02 km/s | |||||||||
சராசரி பிறழ்வு | 50.115° | |||||||||
சாய்வு |
|
|||||||||
Longitude of ascending node | 76.680° [4] | |||||||||
Argument of perihelion | 54.884° | |||||||||
துணைக்கோள்கள் | None | |||||||||
சிறப்பியல்பு
| ||||||||||
சராசரி ஆரம் |
|
|||||||||
தட்டையாதல் | 0[6] | |||||||||
புறப் பரப்பு |
|
|||||||||
கனஅளவு |
|
|||||||||
நிறை |
|
|||||||||
அடர்த்தி | 5.243 g/cm3 | |||||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் |
|
|||||||||
விடுபடு திசைவேகம் | 10.36 km/s (6.44 mi/s)[8] | |||||||||
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | −243.025 d (retrograde)[2] | |||||||||
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் | 6.52 km/h (1.81 m/s) | |||||||||
அச்சுவழிச் சாய்வு | 2.64° (for retrograde rotation) 177.36° (to orbit)[2] |
|||||||||
வடதுருவ வலப்பக்க ஏற்றம் |
|
|||||||||
வடதுருவ இறக்கம் | 67.16° | |||||||||
எதிரொளி திறன் | ||||||||||
மேற்பரப்பு வெப்பநிலை கெல்வின் Celsius |
| |||||||||
தோற்ற ஒளிர்மை | ||||||||||
கோணவிட்டம் | 9.7″ to 66.0″[2] | |||||||||
பெயரெச்சங்கள் | Venusian or (rarely) Cytherean, Venerean | |||||||||
வளிமண்டலம்
| ||||||||||
பரப்பு அழுத்தம் | 92 bar (9.2 MPa) | |||||||||
வளிமண்டல இயைபு |
|
வெள்ளி ஞாயிறை ஒவ்வொரு 224.7 புவி நாட்களில் சுற்றி வருகின்றது.[16] இக்கோளிற்கு இயற்கைத் துணைக்கோள் ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் தோற்ற ஒளிப்பொலிவெண் −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும்.[17] வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது.
வெள்ளிக்கோள் ஒரு புவியொத்த கோள் ஆகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனப்படுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான வளிமண்டலம் உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய காபனீரொக்சைட்டு அடங்கியது. கோளின் தரைப்பரப்பில் வளிமண்டல அழுத்தம் புவியை விட 92 மடங்காக உள்ளது. சூரியக் குடும்பத்தின் மிகவும் வெபமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை 737 K (464 °C; 867 °F)ஆக உள்ளது. இங்கு கார்பன் சுழற்சி நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை; தவிரவும் உயிர்த்திரளில் கரிமத்தை உள்வாங்கிட எவ்வித கரிம உயிரினமும் இல்லை. வெள்ளியின் வளிமண்டலத்தில் சல்பூரிக் அமில மேகங்களின் எதிரொளிப்பால் கீழுள்ள தரைப்பரப்பை ஒளி மூலம் காணவியலாது உள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்;[18][19] ஆனால் இவை பைங்குடில் விளைவின் வெப்பநிலைகளால் ஆவியாகியிருக்கலாம்.[20] ஆவியான நீர் ஒளிமின்பிரிகையால் பிரிக்கப்பட்டிருக்கலாம்; கோளில் காந்தப்புலங்கள் இல்லாமையால் கட்டற்ற ஐதரசன் சூரியக் காற்றால் கோள்களிடையேயான விண்வெளிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.[21] வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதிப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது.
2020 செப்டம்பரில் பாஸ்பீன் வளிமம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறியப்பட்ட இயற்கை மூலங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று நம்பப்படுவதை விட சுமார் பத்தாயிரம் மடங்கு அதிகமான செறிவுகளில் கோளின் வளிமண்டலத்தில் இவ்வாயு உள்ளது.[22] வெள்ளியின் வளிமண்டலத்தில் பாஸ்பீன் கண்டறியப்பட்டமை, அக்கோளின் வளிமண்டலத்தில் கரிம வாழ்வின் சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது.[23][24]