From Wikipedia, the free encyclopedia
அசுவினி பொன்னப்பா (Ashwini Ponnappa; பிறப்பு:18 செப்டம்பர் 1989) ஒரு இந்திய இறக்கை பந்தாட்ட வீராங்கனை ஆவார்.[1][2][3] இவர் இந்திய சார்பில் கலந்துகொண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு வெண்கலம் மற்றும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட பல பதக்கங்களை வென்றுள்ளார். இவர் இந்தியா சார்பில் பல ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளார்.
அசுவினி பொன்னப்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நேர்முக விவரம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு பெயர் | அசுவினி பொன்னப்பா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | செப்டம்பர் 18, 1989 பெங்களூரு, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5'5 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எடை | 58 கிலோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாடிய ஆண்டுகள் | 2007–நடப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கரம் | வலது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிற்சியாளர் | திபங்கர் பட்டாசார்ஜி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மகளிர் இரட்டையர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும தரவரிசையிடம் | 10 (25 ஆகத்து 2010) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தற்போதைய தரவரிசை | 24 (2 சனவரி 2024) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ. உ. கூ. சுயவிவரம் |
கருநாடகத்தை சேர்ந்த அசுவினி பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பிற்காக ஐதராபாத்திற்கு இடம் பெயர்ந்தார்.[4] 24 டிசம்பர் 2017 அன்று, அசுவினி தொழிலதிபர் கரண் மேதப்பாவை மணந்தார்.[5][6]
அசுவினி 2001ஆம் ஆண்டு இந்திய இளநிலை சாதனையாளர் போட்டியில் முதலாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டின் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2010ஆம் ஆண்டு புதுதில்லியில் நடந்த பொதுநலவாய விளையாட்டுக்களில் ஜ்வாலா குட்டாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் கலப்பு அணி போட்டிகளில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.[7]
பிறகு 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் இரட்டையரில் அவர் பங்கேற்றார். 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் குட்டாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[8] பிறகு இருவரும் 29 சூன் 2015 அன்று, கனடா ஓபன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றனர்.[9] 2016 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் அசுவினி குட்டாவுடன் போட்டியிட்டார்.[10] 2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் கலப்பு குழு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் பொன்னப்பா ஒருவராக இருந்தார், மேலும் பெண்கள் இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டியுடன் இணைந்து வெண்கல பதக்கம் வென்றார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.