2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்

From Wikipedia, the free encyclopedia

2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்
Remove ads

2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் (2018 Commonwealth Games) 2018 ஏப்ரல் 4 முதல் 2018 ஏப்ரல் 15 வரை ஆத்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்ட் நகரில் பொதுநலவாய நாடுகளுக்கிடையே நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இதனை நடத்துவதற்கான ஏல முடிவு செயிண்ட் கிட்சின் தலைநகர் பாசெட்டெரேயில் நவம்பர் 11, 2011 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2] ஆத்திரேலியா பொதுநலவாய விளையாட்டுக்களை நடத்தியது இது ஐந்தாவது முறையாகும். முதற் தடவையாக ஒரு பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என சம அளவில் விளயாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

விரைவான உண்மைகள் XXI பொதுநலவாய விளையாட்டுக்கள் XXI Commonwealth Games, நிகழ் நகரம் ...
Remove ads

பங்குபற்றும் அணிகள்

2018 பொதுநலவாய விளையாட்டுகளில் 71 நாடுகள் போட்டியிடுகின்றன.[3] மாலைத்தீவுகள் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது, ஆனால் 2016 அக்டோபரில் அந்நாடு பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது.[4] 2018 மார்ச் 31 இல் காம்பியா பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்பட்டதை அடுத்து போட்டிகளில் பங்குபற்றுகிறது.[5]

Thumb
2018 பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடுகள்
மேலதிகத் தகவல்கள் பங்குபற்றும் பொதுநலவாய நாடுகள்: நாட்டின் பெயர் (போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை) ...

நாடுகள் வாரியாகப் போட்டியாளர்களின் எண்ணிக்கை

மேலதிகத் தகவல்கள் நாட்டின் குறியீடு, நாடு ...
Remove ads

விளையாட்டுக்கள்

பொதுநலவாய கட்டுப்பாட்டு அமைப்பின் நிருவாகத்தின் கீழ் 26 விளையாட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அடிப்படையான 10 விளையாட்டுகள், ஆகக் கூடியது 17 விளையாட்டுகள் எந்த ஒரு பொதுநலவாய விளையாட்டுகளிலும் விளையாடப்படலாம். 10 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்கள்: தடகளம், இறகுப்பந்தாட்டம், குத்துச்சண்டை, வளைதடி, புற்றரை பந்துருட்டல், வலைப் பந்தாட்டம் (பெண்கள்), எழுவர் ரக்பி, சுவர்ப்பந்து, நீச்சல், பாரம் தூக்குதல் ஆகியனவாகும். நீச்சல், தடகளம், மிதிவண்டி ஓட்டம், மேசைப்பந்தாட்டம், பாரம் தூக்குதல், புற்றரைப் பந்துருட்டல் ஆகிய 9 விளையாட்டுகளில் மாற்றுத்திறனாளருக்கான போட்டிகள் இடம்பெற்றன.[6] கடற்கரை கைப்பந்தாட்டம் 18வது விளையாட்டாக 2016 மார்ச் 8 இல் அறிவிக்கப்பட்டது.[7]

பெரும்பாலும் 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் போன்றே விளையாட்டுகள் நடைபெற்றன. யுடோ இம்முறை நடைபெறவில்லை. ஆனால், கூடைப்பந்தாட்டம், மற்றும் பெண்களுக்கான எழுவர் ரக்பி, கடற்கரை கைப்பந்தாட்டம் ஆகியன சேர்த்துக்கொள்ளப்பட்டன.[8]

பெண்களுக்கு ஏழு புதிய விளயாட்டுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இதனால், பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான அளவில் விளயாட்டுகள் நடைபெற்றன. முக்கிய பல்துறை விளையாட்டுப் போட்டி ஒன்றில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். மொத்தம் 18 வகை விளையாட்டுகளில் 275 போட்டிகள் இடம்பெற்றன.[9][10]

Remove ads

பதக்க நிலவரம்

  *   நடத்தும் நாடு (ஆத்திரேலியா)

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...
Remove ads

முதல் வெற்றிகள்

  • சொலமன் தீவுகள் தனது முதலாவது பொதுநலவாய பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. 58 கிகி பாரம் தூக்குதலில் பெண்கள் பிரிவில் ஜென்லி தேகு வின்லி வெண்கலப் பதக்கம் பெற்றார்.[12]
  • குக் தீவுகள் தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. புற்தரைப் பந்துருட்டுதலில் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றது.[13]
  • வனுவாட்டு தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. வேல் எறிதல் பெண்கள் பிரிவில் வெண்கமப் பதக்கம் பெற்றது.[14]
  • டொமினிக்கா தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கம் பெற்றது.[15][16]
  • பிரித்தானிய கன்னித் தீவுகள் தனது முதலாவது பொதுநலவாயப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. ஆண்கள் 400மீ தடையோட்டப் போட்டியில் கைரன் மெக்மாஸ்டர் தங்கப் பதக்கம் பெற்றார்.[17][18]
  • செயிண்ட் லூசியா தனது முதலாவது பொதுநலவாய தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. லெவர்ன் ஸ்பென்சர் பெண்களுக்கான உயரப் பாய்ச்சலில் தங்கப் பதக்கம் பெற்றார்.
Remove ads

ஊக்கமருந்து

இந்தியாவின் சார்பில் பெண்கள் 53கிகி பாரம்தூக்கலில் தங்கம் வென்ற கும்க்சம் சஞ்சிதா சானு ஊக்கமருந்துக்கு எதிரான சோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளமை தெரிய வந்தது. இவரது தங்கப் பதக்கம் மீளப் பெற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பப்புவா நியூ கினியைச் சேர்ந்த தீக்கா தோவா தங்கப் பதக்கத்தையும், வெண்கலம் பெற்ற கனடாவின் ரேச்சல் பாசினெட் வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையைச் சேர்ந்த சமாரி வர்ணகுலசூரியா வெண்கலமும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.[19]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads