திருநாவுக்கரசு நாயனார்

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் மற்றும் தேவார மூவர்களில், 'வேளாளர்' குல நாயன்மார். / From Wikipedia, the free encyclopedia

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.[1] இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.

Quick facts: அப்பர் திருநாவுக்கரசர், பிறப்பு, இயற்பெயர், த...
அப்பர் திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
பிறப்புதிருவாமூர்
இயற்பெயர்மருணீக்கியார்
தலைப்புகள்/விருதுகள்நாயன்மார், மூவர்
தத்துவம்சைவ சமயம் பக்தி நெறி
மேற்கோள்நற்றுணையாவது நமச்சிவாயவே
Close
Quick facts: நால்வர், தலைப்புகள்/விருதுகள், தத்துவம்...
நால்வர்
தலைப்புகள்/விருதுகள்நாயன்மார், சமயக்குரவர்
தத்துவம்சைவ சமயம் பக்தி நெறி
Close
அப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம்
திருஞானசம்பந்தரை பல்லக்கில் சுமக்கும் அப்பர்
அப்பர் சுவாமிகள்

இவரைத் திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால், இவரைத் தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்.[2][3][4]