ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்
From Wikipedia, the free encyclopedia
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (α-Linolenic acid; ALA) என்னும் கரிமச் சேர்மம் பல்வேறு பொதுவான தாவர எண்ணெய்களிலும், கொழுப்புகளிலும் காணப்படுகின்றது. இதன் கட்டமைப்பைக் கொண்டு அனைத்து ஒருபக்க-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம் என்றும்[2], உடலியக்கவியலில் ஒமேகா-3 (18:3; n−3) என்றும் அழைக்கப்படுகின்றது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
லினோலெனிக் அமிலம்; அனைத்து ஒருபக்க-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம்; (9Z,12Z,15Z)-9,12,15-ஆக்டாடெக்காடிரையீனோயிக் அமிலம்; (9Z,12Z,15Z)-ஆக்டாடெக்கா-9,12,15-டிரையீனோயிக் அமிலம்[1]; இண்டஸ்டிரீன் 120 | |
இனங்காட்டிகள் | |
463-40-1 Y | |
ChEBI | CHEBI:27432 Y |
ChEMBL | ChEMBL8739 Y |
ChemSpider | 4444437 Y |
DrugBank | DB00132 Y |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 5280934 |
| |
UNII | 0RBV727H71 Y |
பண்புகள் | |
C18H30O2 | |
வாய்ப்பாட்டு எடை | 278.44 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
விரைவான உண்மைகள் உணவிலுள்ள கொழுப்பு வகைகள், இவற்றையும் காண்க ...
உணவிலுள்ள கொழுப்பு வகைகள் |
---|
|
இவற்றையும் காண்க |
மூடு
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் மூன்று ஒருபக்க இரட்டைப்பிணைப்புகளைக் கொண்ட பதினெட்டு கார்பன் தொடரி கார்பாக்சிலிக் அமிலமாகும். முதலாவது இரட்டைப்பிணைப்பானது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து மூன்றாவது கார்பனில் அமைந்துள்ளது. இதை ஒமேகா (ω அல்லது n) முனை என்கிறோம். எனவே, ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் ஒரு பல்நிறைவுறா ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகும். இது பல்நிறைவுறா ஒமேகா-6 கொழுப்பு அமிலமான காமா-லினோலெனிக் அமிலத்தின் மாற்றியனாகும்.