இந்தியாவின் பொது விடுமுறை நாட்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியா, கலாச்சார ரீதியில் வேறுபட்டிருந்தாலும், பல்வேறு பண்டிகைகளையும், விடுமுறைகளையும் கொண்டாடும் உற்சாகமான சமுதாயம் ஆகும். இந்தியாவில் நான்கு தேசிய நாட்கள் அனுசரிக்கப்படுகிறது, அவை: ஆகஸ்டு 15 அன்று சுதந்திர தினம், அக்டோபர் 2 அன்று மாகத்மா காந்தி பிறந்த தினம், ஜனவரி 26 அன்று குடியரசு தினம்,[1][2] மற்றும் ஏப்ரல் 14 அன்று அம்பேத்கார் தினம்.
மாநிலங்களில் உள்ளூர் மத மற்றும் மொழி சார்ந்த திருவிழாக்கள் உள்ளன. இந்தியா முழுவதும் பிரபலமான மத திருவிழாக்கள் குரு நானக் ஜெயந்தி மற்றும் வைசாக்கி போன்ற சீக்கிய திருவிழாக்கள்; இந்து மத திருவிழாக்கள், பொங்கல், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ரக்ஷா பந்தன், ஹோலி, துர்கா பூஜை, தசரா ; இஸ்லாமிய விழாக்கள் ஈத் உல்-பித்ர், ஈத் அல்-அதா, மீலாது உல் நபி, முஹர்ரம்; புத்தர் ஜெயந்தி மற்றும் லோசர் போன்ற புத்த திருவிழாக்கள் மற்றும் கிறிஸ்தவ விழாக்கள், கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.