கங்கார் பூலாய்
ஜொகூர் மாநிலத்தில் நகர்ப்புறக் கிராமம் / From Wikipedia, the free encyclopedia
கங்கார் பூலாய், (மலாய்: Kangkar Pulai; ஆங்கிலம்: Kangkar Pulai; சீனம்: 江加蒲來新村); ஜாவி: کڠکار ڤولاي ) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறக் கிராமம் ஆகும். மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் கங்கார் பூலாய், நாடு ...
கங்கார் பூலாய் | |
---|---|
நகர்ப்புறம் | |
Kangkar Pulai | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°33′28.260″N 103°35′10.770″E | |
நாடு | Malaysia |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
மாநகரம் | இசுகந்தர் புத்திரி |
முக்கிம் | பூலாய் |
உருவாக்கம் | 1917 |
அரசு | |
• நகரண்மைக் கழகம் | இசுகந்தர் புத்திரி மாநகராட்சி |
• மாநகரத் தலைவர் | சாலேவுடின் அசான் |
• சட்டமன்ற உறுப்பினர் | சுல்கிப்லி அகமது |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 81110 |
மலேசியத் தொலைபேசி எண் | +607 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | J |
மூடு
இந்த நகர்ப்புறக் கிராமத்திற்கு வடக்கிலும் மேற்கிலும் கங்கார் பூலாய் புதுநகரம் (Bandar Baru Kangkar Pulai) உள்ளது. கிழக்கில் தாமான் ஸ்ரீ பூலாய் பெர்டானா 2 (Taman Sri Pulai Perdana 2) எனும் குடியிருப்புத் திட்டம் உள்ளது. மற்ற பகுதிகளில் கெக் செங் (Keck Seng Group) குழுமத்திற்கு சொந்தமான எண்ணய்ப்பனைத் தோட்டங்கள் உள்ளன.[1]