இசுகந்தர் புத்திரி மாநகராட்சி
இசுகந்தர் புத்திரி மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி / From Wikipedia, the free encyclopedia
இசுகந்தர் புத்திரி மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Iskandar Puteri; ஆங்கிலம்: Iskandar Puteri City Council); (சுருக்கம்: MBIP) என்பது மலேசியா, ஜொகூர், மாநிலத்தில் இசுகந்தர் புத்திரி மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் ஜொகூர் மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளது.[1]
விரைவான உண்மைகள் இசுகந்தர் புத்திரி மாநகராட்சிIskandar Puteri City CouncilMajlis Bandaraya Iskandar Puteri, வகை ...
இசுகந்தர் புத்திரி மாநகராட்சி Iskandar Puteri City Council Majlis Bandaraya Iskandar Puteri | |
---|---|
இசுகந்தர் புத்திரி மாநகராட்சி மண்டபம் | |
வகை | |
வகை | மாநகர் மன்றம் (இசுகந்தர் புத்திரி) |
தலைமை | |
நகர முதல்வர் | முகமட் அபிசு அகமது Mohd Haffiz Ahmad |
தலைமைச் செயலாளர் | கசானா சுபாட் Khasanah Sufa’at |
கூடும் இடம் | |
இசுகந்தர் புத்திரி மாநகராட்சி தலைமையகம் Tapak Bangunan Pejabat MBIP, Jalan Medini Sentral 9, Bandar Medini Iskandar, இசுகந்தர் புத்திரி, ஜொகூர் | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 | |
அடிக்குறிப்புகள் | |
2017 வரை முன்பு ஜொகூர் பாரு நகராட்சி (Majlis Perbandaran Johor Bahru Tengah) அல்லது ஜொகூர் பாரு மத்திய ஊராட்சி மன்றம் (Johor Bahru Central Municipal Council) என்று அழைக்கப்பட்டது. |
மூடு
இசுகந்தர் புத்திரி மாநகராட்சியின் அதிகார வரம்பு 104.7 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி, ஜொகூரில் உள்ள ஜொகூர் பாரு மாவட்டத்தின் (Johor Bahru District) ஒரு பகுதியை நிர்வகிக்கிறது. ஜொகூர் பாரு மாவட்டத்தில் தான் இசுகந்தர் புத்திரி மாநகரமும் உள்ளது.