From Wikipedia, the free encyclopedia
கிமி ராய்க்கோனன்(Finnish pronunciation: [ˈkimi ˈmɑtiɑs ˈræikːønen]; பிறப்பு: அக்டோபர்-17, 1979; இடம்- எஸ்பூ), பின்லாந்தைச் சேர்ந்த பந்தயத் தானுந்து ஓட்டுனராவார். பார்முலா ஒன்னில் ஒன்பது பருவங்கள் பங்கேற்ற பிறகு, ஐஸ் ஒன் ரேசிங் அணிக்காக உலக ரால்லி பெருவெற்றித் தொடரில் பங்கேற்கிறார். 2007-ஆம் ஆண்டு பார்முலா 1 தொடரில் பெருவெற்றியும் பெற்றுள்ளார்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
2010 பல்கேரிய திரளணி பந்தயத்தின் போது ராய்க்கோனன் | |
சுய விவரம் | |
---|---|
நாட்டினம் | Finnish |
பிறப்பு | 17 அக்டோபர் 1979 |
உலக திரளணி பெருவெற்றித்தொடர் பதிவு | |
செயல்படும் ஆண்டுகள் | 2009–present |
அணிகள் | Citroën Junior Team, ICE 1 Racing |
திரளணி பந்தயங்கள் | 16 |
பெருவெற்றிகள் | 0 |
திரளணி வெற்றிகள் | 0 |
உயர்மேடை முடிவுகள் | 0 |
வழிக்கட்ட வெற்றிகள் | 1 |
மொத்த புள்ளிகள் | 49 |
முதல் திரளணி பந்தயம் | 2009 Rally Finland |
கடைசி திரளணி பந்தயம் | 2011 Acropolis Rally |
பிறப்பு | 17 அக்டோபர் 1979 |
---|---|
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி | |
செயல்படும் ஆண்டுகள் | 2001–2009 |
அணிகள் | Sauber, McLaren, Ferrari |
பந்தயங்கள் | 157 (156 starts) |
பெருவெற்றிகள் | 1 (2007) |
வெற்றிகள் | 18 |
உயர்மேடை முடிவுகள் | 62 |
மொத்த புள்ளிகள் | 579 |
துருவநிலை தொடக்கங்கள் | 16 |
அதிவேக சுற்றுகள் | 35 |
முதல் பந்தயம் | 2001 Australian Grand Prix |
முதல் வெற்றி | 2003 Malaysian Grand Prix |
கடைசி வெற்றி | 2009 Belgian Grand Prix |
கடைசி பந்தயம் | 2009 Abu Dhabi Grand Prix |
2001-ஆம் ஆண்டு சாபர்-பெட்ரொனாஸ் அணியின் வழக்கமான ஓட்டுனராக கிமி ராய்க்கோனன் பார்முலா 1-ல் நுழைந்தார். இதற்கு முன்னதாக வெகு சில இளநிலை திறந்த-சக்கர தானுந்து போட்டிகளில் மட்டுமே ஓட்டியிருப்பினும் சாபர்-பெட்ரொனாஸ் அணியின் தலைவர் பீட்டர் சாபர் கிமியின் செயல்திறனுக்கு உறுதியளித்ததன் பேரில், அகில உலக தானுந்து கூட்டமைப்பு கிமிக்கு சூப்பர் ஓட்டுநர் உரிமம் வழங்கியது[1]. 2002-ஆம் வருடம் மெக்லாரன்-மெர்சிடஸ் அணியில் சேர்ந்தார். 2003, 2005 பருவங்களில் பெருவெற்றிப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றார். அவ்வருடங்களில் முறையே மைக்கேல் சூமாக்கர், ஃபெர்னான்டோ அலோன்ஸா ஆகியோர் பெருவெற்றியாளர்களாயினர். 2003 மற்றும் 2005 வருடங்களில் மெக்லாரன் தானுந்துகளின் நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குரியதாயிருந்தது. அத்தகைய இடர்ப்பாடுகள் ஏற்படவில்லையாயின் ராய்க்கோனன் எளிதில் பெருவெற்றியாளர் ஆகியிருப்பார் என்பது பல பார்முலா 1 மேதாவிகளின் கருத்தாகும்.
2007-ஆம் ஆண்டு கிமி ஃபெராரி அணிக்கு மாறினார். ஆண்டுக்கு $51 மில்லியன் சம்பளம் பெற்றதன் மூலம் தானுந்து உலகிலேயே மிக அதிக சம்பளம் பெறும் ஓட்டுனரானார்[2]. ஃபெராரியில் முதல் வருடத்திலேயே பெருவெற்றியாளரானார். மெக்லாரனின் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் ஃபெர்னான்டோ அலோன்ஸா ஆகியோரை ஒரு புள்ளியில் வென்று பெருவெற்றியைக் கைப்பற்றினார். மேலும், தமது முதல் வருடத்திலேயே ஃபெராரியுடன் பெருவெற்றி பெற்ற மிகச்சில ஓட்டுநர்களில் ஒருவரானார். 2008-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஒரு பருவத்தில் மிக அதிக "அதிவேக சுற்று"களை ஓட்டியவரானார். மேலும் ஒரு வருடத்திற்குப் பிறகு(2010-ல்) ஃபெராரியிலிருந்து விலகி உலக திரளணி போட்டித்தொடரில் சிட்ரொயன் இளவல் அணிக்கான ஓட்டுநரானார். அதில் அவர் சிட்ரொயன் சி4 டபிள்யூ.ஆர்.சி. தானுந்தை ஓட்டினார். உலக திரளணி பெருவெற்றித்தொடரைத் தவிர நாஸ்கார் தொடரிலும் ஆர்வம் கொண்டவராயிருந்தார். ஆகையால் கைல் புஷ் மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணிக்காக கேம்பிங் வேர்ல்டு டிரக் சீரீஸில் பங்கெடுத்தார்[3].
கிமி ராய்க்கோனன் மிகவும் அமைதியானவராகவும் ஆசுவாசத்தோடிருப்பவராகவும் வாழ்விலும் தானுந்துப் போட்டிகளிலும் ஒவ்வொரு படியையும் ஆராய்ந்து எடுப்பவராகவும் அறியப்படுகிறார். அதனாலேயே, அவர் "ஐஸ்மேன்" என்ற அடைமொழியால் அறியப்படுகிறார். தனது இடது முன்கையின் கீழ்புறத்தில் "ஐஸ்மேன்" என்று பச்சைகுத்தியுள்ளார். அவரது தலைக்கவசதிலும் இப்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது மற்ற பட்டப்பெயர்கள் கிம்பா, ராய்க்கா, கிம்ஸ்டர்.
2008-ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 100 புகழ்பெற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்ற இரண்டு பார்முலா 1 ஓட்டுநர்களில் இவரும் ஒருவர். மற்றையவர் ஃபெர்னான்டோ அலோன்ஸா ஆவார். அந்த பட்டியலில் அவர் 2008-ஆம் ஆண்டு 36-வது இடத்திலும் அதற்கு முந்தைய ஆண்டு 41-வது இடத்திலும் இருந்தார்[4]. மேலும் அதே பட்டியலில் அதிக சம்பளம் பெறும் புகழ்பெற்றவர்களில் 26-வது இடத்திலும் விளையாட்டு வீரர்களில் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலில் 5-வது இடத்திலும் (முதல் நான்கு இடங்கள் முறையே டைகர் வுட்ஸ்,டேவிட் பெக்காம்,மைக்கேல் ஜோர்டான்,பில் மிக்கல்சன்) இடம்பெற்றிருந்தார். 2009-ஆம் ஆண்டு அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் டைகர் வுட்ஸுக்கு அடுத்து இரண்டாம் இடம் பெற்றிருந்தார்[5].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.