கோத்தா பாரு
மலேசியா, கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரமாகும் / From Wikipedia, the free encyclopedia
கோத்தா பாரு (மலாய்: Kota Bharu; ஆங்கிலம்: Kota Bharu) மலேசியா, கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். கோத்தா பாரு என்றால் மலாய் மொழியில் புதிய நகரம் அல்லது புதிய கோட்டை என்று பொருள்.[3]
விரைவான உண்மைகள் கோத்தா பாரு Kota Bharuكوت بهارو哥打峇鲁, நாடு ...
கோத்தா பாரு
Kota Bharu كوت بهارو 哥打峇鲁 | |
---|---|
அடைபெயர்(கள்): இசுலாமிய நகரம் | |
ஆள்கூறுகள்: 6°8′N 102°15′E | |
நாடு | Malaysia |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | கோத்தா பாரு மாவட்டம் |
முதலில் குடியேறியது | 1844 |
நகராட்சி நிலை | 1 சனவரி 1979 |
அரசு | |
• தலைவர் | சைனல் அபிதீன் பின் துவான் யூசுப் (செப்டம்பர் 2018 முதல்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 115.64 km2 (44.65 sq mi) |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 3,14,964 |
• அடர்த்தி | 2,700/km2 (7,100/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 15xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +60-09-7 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | K |
இணையதளம் | mpkbbri |
மூடு
தீபகற்ப மலேசியாவின் வடகிழக்குப் பகுதியில், தாய்லாந்து எல்லைக்கு அருகில், கிளந்தான் ஆற்றின் முகத்துவாரத்தில் கோத்தா பாரு மாநகரம் அமைந்து உள்ளது.
கோத்தா பாரு நகரத்தின் மையத்தில் பல பள்ளிவாசல்கள்கள், பல்வேறு அருங்காட்சியகங்கள், தனித்துவமான கட்டிடக் கலையில் உருவாக்கப்பட்ட பழைய அரச அரண்மனைகள் மற்றும் முன்னாள் அரச கட்டிடங்கள் உள்ளன.[4]