கிளாந்தான்
மலேசிய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
கிளாந்தான் (ஆங்கிலம்: Kelantan; மலாய் மொழி: Kelantan Darul Naim; சீனம்: 吉蘭丹; சாவி: کلنتن دار النعيم தாய் மொழி: รัฐกลันตัน) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தின் வடக்கே தாய்லாந்து நாடு உள்ளது. கிளாந்தான் மாநிலத்திற்கு மேற்கே பேராக், கெடா, பெர்லிஸ் மாநிலங்கள் உள்ளன. தெற்கே திராங்கானு, பகாங் மாநிலங்கள் உள்ளன. கிழக்கே தென் சீனக் கடல் உள்ளது. பகாங் மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 474 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.
கிளாந்தான் | |
---|---|
கிளாந்தான் டாருல் நாயிம் Kelantan Darul Naim كيلانتان دار نعيم | |
பண்: சுல்தான் வாழ்க سلامت سلطان (God) Save The Sultan | |
கிளாந்தான் மலேசியா | |
ஆள்கூறுகள்: 5°15′N 102°0′E | |
தலைநகர் | கோத்தா பாரு |
அரச நகர் | குபாங் கிரியான் |
அரசு | |
• ஆளும் கட்சி | பெரிக்காத்தான் |
• சுல்தான் | சுல்தான் முகமது V |
• மந்திரி பெசார் | அகமது யாக்கோப் |
பரப்பளவு | |
• மொத்தம் | 15,040 km2 (5,810 sq mi) |
உயர் புள்ளி | 2,181 m (7,156 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 18,12,300 |
• அடர்த்தி | 120/km2 (300/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 1 |
மாநில குறியீடு | |
• HDI (2021) | 0.779 (very high) |
• GDP (2021) | RM 25.8 பில்லியன் |
• GDP தனிநபர் (2021) | RM 14,643 |
• TFR (2021) | 2.7 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 15xxx to 18xxx |
மலேசியத் தொலைபேசி எண் | 09 |
மலேசிய பதிவெண்கள் | D |
இந்து-பௌத்த காலம் | 100 கி.மு |
சயாமிய கட்டுப்பாடு | நவம்பர் 1786 |
கிளாந்தான் சுல்தானகம்[2] | 1800 |
பிரித்தானிய கட்டுப்பாடு[2] | 1909 |
மலாயாவில் ஜப்பானியர்[2] | 8 டிசம்பர் 1941 |
மலாயா கூட்டமைப்பு[3] | 1 பிப்ரவரி 1948 |
இணையதளம் | http://www.kelantan.gov.my |
கோத்தா பாரு நகரம் கிளாந்தான் மாநிலத்தின் அரச நகரமாகவும், தலைநகரமாகவும் விளங்குகின்றது. கிளாந்தான் மாநிலத்திற்கு ‘டாருல் நாயிம்’ எனும் நன்மதிப்பு அரபு அடைமொழியும் உண்டு. ’டாருல் நாயிம்’ என்றால் ‘மகிழ்ச்சியான இருப்பிடம்’ என்று பொருள். [4]
கிளாந்தான் ஒரு விவசாய மாநிலம் ஆகும். இங்கு நெல் வயல்கள் நிறைந்து காணப்படுகின்றன. கடற்கரைகளில் நிறைய மீனவக் கிராமங்கள் உள்ளன.[5] பல ஆயிரம் ஆண்டுகளாகப் பூர்வீகக் குடிமக்கள், இந்த மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.