கோத்தா பாரு மாவட்டம்
மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோத்தா பாரு மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Kota Bharu; ஆங்கிலம்: Kota Bharu District; சீனம்: 哥打峇鲁县; ஜாவி: كوت بهارو ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம். கோத்தா பாரு நகராண்மைக் கழகம் (Kota Bharu Municipal Council); கெத்தேரே மாவட்ட மன்றம் (Ketereh District Council); ஆகிய இரு மாவட்ட மன்றங்களால் நிர்வகிக்கப் படுகிறது.
விரைவான உண்மைகள் கோத்தா பாரு, நாடு ...
கோத்தா பாரு | |
---|---|
Kota Bharu District | |
மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 6°5′N 102°16′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | கோத்தா பாரு மாவட்டம் |
தொகுதி | கோத்தா பாரு |
உள்ளூராட்சி | கோத்தா பாரு நகராண்மைக் கழகம் கெத்தேரே மாவட்ட மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | தெங்கு அசுமி தெங்கு ஜாபார் |
பரப்பளவு | |
• மொத்தம் | 409 km2 (158 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 6,08,600 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 15xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-09 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | D |
மூடு
2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, கோத்தா பாரு மாவட்டத்தின் மக்கள் தொகை 608,600 என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டம் மாநிலத் தலைநகரான கோத்தா பாரு; பெங்காலான் செப்பா; கெத்தேரே ஆகிய நகரங்களைக் கொண்டுள்ளது.