From Wikipedia, the free encyclopedia
சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது (National Film Award for Best Female Playback Singer) 1968 முதல், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் அந்தந்த ஆண்டில் வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் பின்னணி பாடிய பெண் பாடகர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | தேசிய விருது | |
பகுப்பு | இந்தியத் திரைப்படத்துறை | |
நிறுவியது | 1968 | |
முதலில் வழங்கப்பட்டது | 1968 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2015 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 47 | |
வழங்கப்பட்டது | திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா | |
நிதிப் பரிசு | ₹50,000 (US$630) | |
பதக்கம் | வெள்ளித் தாமரை | |
விவரம் | ஒரு ஆண்டின் சிறந்த பெண் திரைப்படப் பின்னணிப் பாடகர் | |
முதல் வெற்றியாளர்(கள்) | பி. சுசீலா |
இவ்விருதில்,1974 ஆம் ஆண்டுவரை ஒரு நினைவுத் தட்டும் சான்றிதழும் அளிக்கப்பட்டு வந்தது. 1975 இலிருந்து வெள்ளித் தாமரையும் சான்றிதழும், 2013 ஆம் ஆண்டில் 61 ஆவது விழாவில் ₹50,000 (US$630) பணப் பரிசும் அளிக்கப்படுகிறது இவ்விருதுபெற்ற முதல் பாடகர் பி. சுசீலா ஆவார். உயர்ந்த மனிதன் தமிழ்த் திரைப்படத்தில் பி. சுசீலா பாடிய நாளை இந்த நேரம் பார்த்து ஓடிவா நிலா..., என்ற பாடலுக்காக 16 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை அதிகமுறை பெற்றவர்களில் பின்னணிப் பாடகர் சித்ரா (ஆறு முறை) முன்னணியில் உள்ளார். இரண்டாவது நிலையில் உள்ளவர் ஐந்து முறை விருதுபெற்றப் பாடகர் பி. சுசீலா. 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, எஸ். ஜானகி, சிரேயா கோசல் இருவரும் நான்குமுறையும்,லதா மங்கேஷ்கர், வாணி ஜெயராம் இருவரும் மூன்று முறையும் இவ்விருது பெற்றுள்ளனர். ஆஷா போஸ்லே, ஆல்கா யாக்னிக், ஆரத்தி அங்காலிகர் (Arati Ankalikar-Tikekar) மூவரும் இருமுறை இவ்விருது பெற்றுள்ளனர். மூன்று வெவ்வேறு மொழிப்பாடல்களைப் பாடி இவ்விருதினைப் பெற்றவர்கள் எஸ். ஜானகி, சித்ரா, சிரேயா கோசல் ஆவர். ஒரே ஆண்டில் இரு வெவ்வேறு மொழிகளில் பாடிய இரு வெவ்வேறு பாடல்களுக்காக இவ்விருதினைப் பெற்ற ஒரே பாடகர் சிரேயா கோசல் மட்டுமே ஆவார். உத்ரா உன்னிகிருஷ்ணன்தான் (10 வயதில்) இவ்விருதினைப் பெற்ற இளம் பாடகர்.[1][2] ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் தமிழ்த் திரைப்படத்தில் இவர் பாடிய "அழகு"... பாடலுக்காக இவருக்கு வழங்கப்பட்டது[3]. 1973 ஆண்டுக்கு இவ்விருது எவருக்கும் வழங்கப்படவில்லை.
விருதுபெற்றவர்களின் பட்டியல்: வழங்கப்பட்ட ஆண்டு, பாட்டு, திரைப்படம், மொழி, சான்று | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | ஆண்டு | விருதுபெற்றவர் | பாட்டு | திரைப்படம் | மொழி | சான்று | Refs. |
16 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1968 | பி. சுசீலா | – | உயர்ந்த மனிதன் | தமிழ் | – | [4] | |
17 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1969 | கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் | – | துணைவன் | தமிழ் | – | [5] | |
18 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1970 | – | சந்தியா முகோபதியா (Sandhya Mukhopadhyay) | – | • ஜே ஜெயந்தி • நிஷி பத்மா |
வங்காள மொழி | – | [6] |
19 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1971 | பி. சுசீலா | – | சவாலே சமாளி | தமிழ் | – | [7] | |
20 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1972 | லதா மங்கேஷ்கர் | – | பரீட்சை (Parichay) | இந்தி | – | [8] | |
21 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1973 | விருதில்லை | [9] | |||||
22 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1974 | லதா மங்கேஷ்கர் | – | கோரா காகசு (Kora Kagaz) | இந்தி | – | [10] | |
23 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1975 | – | வாணி ஜெயராம் | – | அபூர்வ ராகங்கள் | தமிழ் | – | [11] |
24 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1976 | பி. சுசீலா | – | சிரி சிரி முவ்வா | தெலுங்கு | – | [7] | |
25 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1977 | எஸ். ஜானகி | "செந்தூரப் பூவே" | பதினாறு வயதினிலே | தமிழ் |
For purity of diction and melodic excellence; for emotive suggestiveness and lyrical appeal; for a quality of expression which is intensely moving; for rendering the theme song "Senthoora Poove" with deep feeling, reflecting the romantic dreams of youth, slowly merging into the shadows of tragic destiny. |
[12] | |
26 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1978 | – | சாயா கங்குலி (Chhaya Ganguly) | "ஆப் கி யாத் ரகி ராத் பார் (Aap Ki Yaad Aati Rahi Raat Bhar)" | காமன் (Gaman) | இந்தி |
For a hauting rendition of Makhdun Mohluddin's famous ghazal "Aap Ki Yaad Aati Rahi Raat Bhar". The chastity of style, the purity of enunciation and the freshness of voice contribute to make it into a memorable song. |
[13] |
27 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1979 | – | வாணி ஜெயராம் | – | சங்கராபரணம் (திரைப்படம்) | தெலுங்கு | – | [14] |
28 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1980 | எஸ். ஜானகி | "எட்டுமனூர் அம்பலத்தில் எழுன்னுல்லாத்து" (Ettumanoor Ambalathil Ezhunnallathu) | ஓப்போல் (Oppol) | மலையாளம் |
For the serenity and pathos with which each rendering is imbued and for adding a new dimension to the theme of the film. |
[15] | |
29 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1981 | ஆஷா போஸ்லே | – | உம்ரோ ஜான் (Umrao Jaan) | இந்தி |
For the style with which she invests the rendering of the ghazals that form a part of the texture of the film. |
[16] | |
30 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1982 | பி. சுசீலா | – | மேகசந்தேசம் (Meghasandesam) | தெலுங்கு |
For her immense contribution to the musical excellence of the film. |
[17] | |
31 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1983 | பி. சுசீலா | "எந்தோ பீடா வாடே கோபாலடு (Yendho Beeda Vaade Gopaludu)" | எம். எல். ஏ. யேடுகொண்டலு (M. L. A. Yedukondalu) | தெலுங்கு |
For her fine flight of voice in the endearing of Gopal's magical childhood in the song "Gopaludu" from the film. |
[18] | |
32 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1984 | எஸ். ஜானகி | – | சித்தாரா (Sitaara) | தெலுங்கு | – | [19] | |
33 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1985 | சித்ரா | "பாடறியேன் படிப்பறியேன்" | சிந்து பைரவி | தமிழ் |
For melifluous rendering of songs, both in the folk and the classical moulds, bringing about a melodious synthesis between the two. |
[20] | |
34 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1986 | சித்ரா | "மஞ்சள் பிரசடவும் (Manjal Prasadavum)" | (Nakhakshathangal) | மலையாளம் |
For her melodious rendering of songs. |
[21] | |
35 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1987 | ஆஷா போஸ்லே | " மேரா குச் சாமான் (Mera Kuchh Saamaan)" | லிஜாசத் (Ijaazat) | இந்தி |
For her rendition with high professional skill and expression, of the many nuances of emotion and meaning of the highly poetic lyrics. |
[22] | |
36 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1988 | சித்ரா | "இந்துபுஷ்பம் சூடி நில்கும் (Indupushpam Choodi Nilkum)" | வைஷாலி | மலையாளம் |
For her clear and tuneful rendering of the song. |
[23] | |
37 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1989 | அனுராதா பௌடுவால் (Anuradha Paudwal) | "ஹி ஏக் ரேஷாமி கரதே (He Ek Reshami Gharate)" | கலத் நகலத் (Kalat Nakalat) | மராத்தி |
For her clear and mellifluous rendering of the song. |
[24] | |
38 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1990 | லதா மங்கேஷ்கர் | – | லேக்கின் (Lekin...) | இந்தி |
For singing with outstanding expressions with the rarest and purest of styles. |
[25] | |
39 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1991 | – | வாணி ஜெயராம் | "Aanati Neeyaraa" | சுவாதி கிரணம் (Swathi Kiranam) | தெலுங்கு |
For the texture and clarity of her voice, which enlivened the classical song sung for the child prodigy. |
[26] |
40 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1992 | எஸ். ஜானகி | "இஞ்சி இடுப்பழகி" | தேவர் மகன் | தமிழ் |
For melodious rendering of an innocent love song. |
[27] | |
41 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1993 (41st)]] |
ஆல்கா யாக்னிக் | "கூங்காட் கி ஆட் சே (Ghoonghat Ki Aad Se)" | ஹம் ஹெயின் ரஹி பியார் கி (Hum Hain Rahi Pyar Ke) | இந்தி |
For her ability to identify herself with the characters and render the delicate nuances of human feelings in complex situations. |
[28] | |
42 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1994 | – | சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) | "போறாளே பொன்னுத்தாயி" | கருத்தம்மா (திரைப்படம்) | தமிழ் |
For her extraordinarily compassionate song upon which much of the crucial dramatic action in the film is enacted. |
[29] |
43 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1995 | அஞ்சலி குல்கர்னி (Anjali Kulkarni) | "புய் பெகலாலி கோல் (Bhui Bhegalali Khol)" | தோஹி (Doghi) | மராத்தி |
For her melodious and heart rendering song expressing the aridness of life. |
[30] | |
44 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1996 | சித்ரா | "மானா மதுரை" | மின்சார கனவு | தமிழ் |
For her soulful rendering of the song. |
[31] | |
45 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1997 | சித்ரா | "பாயலின் சுன் முன் (Paayalein Chhun Mun)" | விரசத் (Virasat (1997 film)) | இந்தி |
For her effortless and playful rendering of the song. |
[32] | |
46 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1998 | ஆல்கா யாக்னிக் | "குச் குச் ஹோத்தா ஹை" | குச் குச் ஹோத்தா ஹை | இந்தி |
Her rendering of this theme song brings out the different moods and emotion and adds greatly to the impact of the film. |
[33] | |
47 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 1999 | – | ஜெயஸ்ரீ தாசகுப்தா | "ஹிரிடே அமர் புரொகாஷ் கோலோ (Hriday Amar Prokash Holo)" | பரோமிதர் ஏக் தின் (Paromitar Ek Din) | வங்காள மொழி |
For soulful rendering by the singer expressing the inner world of a mentally challenged character in this film. |
[34] |
48 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2000 | – | பவதாரிணி | "மயில் போல பொண்ணு ஒண்ணு" | பாரதி | தமிழ் |
For the song which is outstanding because it depicts the velvet voice of the diva. |
[35] |
49 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2001 | சாதனா சர்கம் | "பாட்டு சொல்லி" | அழகி | தமிழ் |
For her lilting and touching rendering of the song. |
[36] | |
50 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2002 | சிரேயா கோசல் | "பைரி பியா (Bairi Piya)" | தேவ்தாஸ் | இந்தி |
For her soulful rendering of the song. |
[37] | |
51 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2003 | – | தரலி சர்மா (Tarali Sarma) | "ககுதி கோஷா (Kakuti Gosha)" | ஆகாஷிதோரர் கோத்தரெ (Akashitorar Kothare) | அசாமியம் |
For her tuneful rendition of a devotional song without instrumental accompaniment. |
[38] |
52 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2004 | சித்ரா | "ஒவ்வொரு பூக்களுமே (திரைப் பாடல்)" | ஆட்டோகிராப் | தமிழ் |
For expressive and soulful rendition of the song with powerful voice throw suitable to the text and the scene. |
[39] | |
53 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2005 | சிரேயா கோசல் | "தீரே ஜல்னா (Dheere Jalna)" | பகெலி | இந்தி |
For her evocative rendition of a song that treads the fine balance between the classical and popular genre of Hindi film music. |
[40] | |
54 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2006 | ஆரத்தி அங்கலிகர் (Arati Ankalikar-Tikekar) | – | அந்தர்நாட் (Antarnad) | கொங்கணி |
For the sonorous rendering that gives conviction to the central character of a classical vocalist. |
[41] | |
55 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2007 | சிரேயா கோசல் | "யே இஷ்க் ஹாயே (Yeh Ishq Haaye)"[42] | ஜப் வீ மெட் | இந்தி |
For her mellifluous voice and rich tonal quality. Her rendition evokes the beauty of nature through its subtle nuances. |
[43] | |
56 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2008 | சிரேயா கோசல் | • "பெராரி மன் (Pherari Mon)" • "ஜீவ் தங்லா குங்கலா ரங்கலா ஆசா (Jeev Dangla Gungla Rangla Asa)" |
• அந்தஹீன் (Antaheen) • ஜோக்வா (Jogwa) |
வங்காள மொழி மராத்தி |
For her wide ranging rendition of human emotions. |
[44] | |
57 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2009 | – | நிலஞ்சன சர்க்கார் (Nilanjana Sarkar) | "Boye Jay Sudhu Bish"[45] | ஹவுஸ்புல் (2009 வங்காளத் திரைப்படம்) | வங்காள மொழி |
For the haunting texture of a voice that blends the melody, words and rhythm. |
[46] |
58 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2010 | ரேகா பரத்வாஜ் | "படி தீரே ஜாலி (Badi Dheere Jali)" | இஷ்கியா (Ishqiya) | இந்தி |
For a sensual and evocative rendering of a heart longing for the beloved. |
[47] | |
59 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2011 | ரூபா கங்குலி | • "துரே கோத்தா துரே துரே (Dure Kothao Dure Dure)" • "ஆஜி பிஜன் கரே (Aaji Bijan Ghare)" |
அபொஷிஷே (Abosheshey) | வங்காள மொழி |
For her husky and haunting voice that brings a gentle, nostalgic tone and tenor to the film Abosheshey. The languid raw sensuality of her singing is heightened by the absence of musical accompaniment. |
[48] | |
60வது தேசியத் திரைப்பட விருதுகள், 2012 | ஆரத்தி அங்கலிகர் (Arati Ankalikar-Tikekar) | "பாலகீன் நா மூண்டன் (Palakein Naa Moondon)" | சம்ஹிதா (Samhita) | மராத்தி |
Gifted with an earthy and haunting voice the singer gives ample evidence of her classical moorings, without any instrumental embellishments. |
[49] | |
61 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2013 | பெலா ஷெண்டே (Bela Shende) | " குர்க்குரா (Khurkhura)" | துஹியா தர்மா கொஞ்ச்சா (Tuhya Dharma Koncha) | மராத்தி |
The singer has evoked the requisite emotions of the theme of the film. She has displayed a rare variety in the rendering of this composition. |
[50] | |
62 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2014 | – | உத்ரா உன்னிகிருஷ்ணன் | "அழகு" | சைவம் | தமிழ் |
For evoking an emotional resonance through the purity and innocence of her voice. |
[51] |
63 ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், 2015 | மோனாலி தாகூர் | "மோ மோ கி தாகே (Moh Moh Ke Dhage)" | தும் லகா கி ஹெய்ஷா (Dum Laga Ke Haisha) | இந்தி |
For a delightful and soulful rendition of a song of love. |
[52] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.