ஏ. எல். விஜய்

தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

ஏ. எல். விஜய்
Remove ads

ஏ. எல். விஜய் (A. L. Vijay, பிறப்பு: 18 சூன் 1979) இவர் இந்திய நாட்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். அவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

விரைவான உண்மைகள் ஏ. எல். விஜய், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

இவர் இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார். 2007ம் ஆண்டு அஜித் மற்றும் திரிஷா நடித்த கிரீடம் என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு பொய் சொல்லப் போறோம் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குநர். 2010ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஏமி சாக்சன் நடித்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குநர் ஆனார். 2011ஆம் ஆண்டு விக்ரம், அனுஷ்கா, அமலா பால் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தையும், 2013ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா என்ற திரைப்படத்தை இயக்கினார்.

Remove ads

குடும்பம்

இவர் தலைவா படத்தின் போது நடிகை அமலா பாலுடன் காதல் ஏற்பட்டு, 2014 ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஐஸ்வர்யா என்ற பொதுநல மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு துருவா விஜய் என்ற மகனும் உண்டு.[1]

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads