From Wikipedia, the free encyclopedia
டிராய் (Troy) ஐக்கிய அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் பெருநகர டிட்ராயிட்டின் வடக்குப் புறநகர்ப்பகுதியில் ஓக்லாந்து மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும். 2010 ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 80,980 ஆகும். மிச்சிகனில் இது 11வது பெரிய நகரமாக விளங்குகின்றது. பெருநகர டிட்ராய்ட்டின் வணிக, அங்காடி மையமாக டிராய் விளங்குகின்றது. இங்கு பல அலுவலகக் கட்டிடங்களும் மிக நவீன சாமர்செட் அங்காடி வளாகமும் உள்ளன.
டிராய், மிச்சிகன் | |
---|---|
குறிக்கோளுரை: நாளைய நகரம் ... இன்று | |
மிச்சிகன் மாநிலத்தில் அமைவிடம் | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மாநிலம் | மிச்சிகன் |
மாவட்டம் | ஓக்லாந்து |
அரசு | |
• வகை | மன்றம்-மேலாளர் |
• நகரத்தந்தை | டேன் இசுலேட்டர் |
• நகர மேலாளர் | பிரியன் கிழ்ச்னிக்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 33.64 sq mi (87.13 km2) |
• நிலம் | 33.47 sq mi (86.69 km2) |
• நீர் | 0.17 sq mi (0.44 km2) |
ஏற்றம் | 748 ft (228 m) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 80,980 |
• மதிப்பீடு (2012[3]) | 82,212 |
• அடர்த்தி | 2,419.5/sq mi (934.2/km2) |
நேர வலயம் | ஒசநே-5 (கி.நே.வ) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கி.ப.நே.வ) |
சிப் குறியீடுகள் | 48007, 48083, 48084, 48085, 48098, 48099 |
இடக் குறியீடு(கள்) | 248, 947தொலைபேசிக் குறியீடு |
பிப்சு குறியீடு | 26-80700 |
புவியியல் பெயர்த் தகவல் அமைப்பு எண் | 1615125[4] |
இணையதளம் | http://www.troymi.gov |
2011இல் மிச்சிகனின் மிகவும் பாதுகாப்பான நகரமாக டிராய் மதிப்பிடப்பட்டுள்ளது. 2008இல் வீடு, கல்வி, பொருளியல் நிலை, மகிழ்கலை வாய்ப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு சிஎன்என் மணி நடத்திய ஆய்வில் ஐக்கிய அமெரிக்காவின் "வாழ மிகச் சிறந்தவிடங்கள்" பட்டியலில் 22ஆம் இடத்தில் இருந்தது.[5] 2008இல் வீட்டு வருமானம் ஏறத்தாழ $79,000 இருந்த டிராய் ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் தாங்கத்தகு நகரங்களில் நான்காமிடத்தில் இருந்தது.[6][7]
ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி இந்நகரத்தின் பரப்பளவு 33.64 சதுர மைல்கள் (87.13 km2) ஆகும்; இதில் நிலப்பகுதி 33.47 சதுர மைல்கள் (86.69 km2), நீர்ப்பகுதி 0.17 சதுர மைல்கள் (0.44 km2) ஆகும்.[2] டிராயின் நிலநேர்க்கோடு: 42.605 N, நிலநிரைக்கோடு : 83.15 W ஆகும். சராசரி உயரம் 748 அடி (228 m) ஆகும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், டிராய், மிச்சிகன் (48098) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °F (°C) | 66 (18.9) |
65 (18.3) |
78 (25.6) |
87 (30.6) |
92 (33.3) |
102 (38.9) |
104 (40) |
101 (38.3) |
98 (36.7) |
90 (32.2) |
79 (26.1) |
64 (17.8) |
104 (40) |
உயர் சராசரி °F (°C) | 30 (-1.1) |
34 (1.1) |
45 (7.2) |
58 (14.4) |
70 (21.1) |
79 (26.1) |
82 (27.8) |
80 (26.7) |
73 (22.8) |
60 (15.6) |
46 (7.8) |
34 (1.1) |
57.6 (14.21) |
தாழ் சராசரி °F (°C) | 16 (-8.9) |
18 (-7.8) |
26 (-3.3) |
36 (2.2) |
48 (8.9) |
57 (13.9) |
61 (16.1) |
60 (15.6) |
53 (11.7) |
42 (5.6) |
32 (0) |
22 (-5.6) |
39.3 (4.03) |
பதியப்பட்ட தாழ் °F (°C) | -21 (-29.4) |
-12 (-24.4) |
-5 (-20.6) |
8 (-13.3) |
24 (-4.4) |
34 (1.1) |
41 (5) |
40 (4.4) |
31 (-0.6) |
19 (-7.2) |
2 (-16.7) |
-11 (-23.9) |
−21 (−29.4) |
பொழிவு inches (mm) | 1.77 (45) |
2.02 (51.3) |
2.18 (55.4) |
2.75 (69.9) |
3.16 (80.3) |
3.25 (82.6) |
2.86 (72.6) |
2.88 (73.2) |
3.10 (78.7) |
2.97 (75.4) |
2.75 (69.9) |
2.20 (55.9) |
31.89 (810) |
ஆதாரம்: Intellicast [8] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.