டெளன் நோய்க்கூட்டறிகுறி
From Wikipedia, the free encyclopedia
டௌன் நோய்க்கூட்டறிகுறி (Down Syndrome/Down's Syndrome) அல்லது டௌன் நோய்த்தொகை என்பது மனிதரில் காணப்படும் 21 ஆம் நிறப்புரியில் இரண்டு இருப்பதற்குப் பதிலாக, பகுதியாகவோ, முழுமையாகவோ மேலதிகமான ஒரு நிறப்புரி காணப்படும் நிலையாகும். மரபணு கோளாறுகளில் இந்நோயானது மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
விரைவான உண்மைகள் டெளன் நோய்க்கூட்டறிகுறி, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
டெளன் நோய்க்கூட்டறிகுறி | |
---|---|
டெளன் நோய்க் குறித்தொகுப்புள்ள ஒரு சிறுவன் புத்தக அலமாரி ஒன்றை உருவாக்குகிறான். | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | medical genetics, நரம்பியல் |
ஐ.சி.டி.-10 | Q90. |
ஐ.சி.டி.-9 | 758.0 |
ம.இ.மெ.ம | 190685 |
நோய்களின் தரவுத்தளம் | 3898 |
மெரிசின்பிளசு | 000997 |
ஈமெடிசின் | ped/615 |
பேசியண்ட் ஐ.இ | டெளன் நோய்க்கூட்டறிகுறி |
ம.பா.த | D004314 |
மூடு
இது பல்வேறு அளவில், கற்கும் திறனையும் உடலையும் பாதிக்கிறது. இதில் சில வேறுபட்ட வகைகள் இருப்பினும் டிரைசமி-21 அல்லது டிரைசமி-ஜி (Trisomy 21 / Trisomy G) என்னும் வகை 95% ஆகும். இக்குறையை முதலில் வரையறுத்த ஜான் லாங்டன்-டவுன் என்ற ஆங்கிலேய மருத்துவர் பெயரால் இந்தக் கோளாறு பெயரிட்டு அழைக்கப்படுகிறது.