திமசுக்கு ஆளுநரகம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
திமிஷ்கு கவர்னரேட் (Damascus Governorate, அரபு மொழி: مُحافظة دمشق Muḥāfaẓat Dimashq ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது ரிஃப் டிமாஷ்க் ஆளுநரகத்தால் முழுமையாக சூழப்பட்டுள்ளது. இது சிரியாவின் தலைநகரான திமிஷ்கு நகரம் மற்றும் யர்மௌக் முகாமின் புறநகர்ப் பகுதிகளை மட்டுமே கொண்டுள்ளது.
டமாஸ்கஸ் ஆளுநரகம்
مُحافظة دمشق | |
---|---|
ஆளுநரகம் | |
சிரியாவில் டமாஸ்கசின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (டமாஸ்கஸ்): 33.513°N 36.292°E | |
நாடு | சிரியா |
தலைநகரம் | டமாஸ்கஸ் |
அரசு | |
• Governor | Adel al-Olabi |
மக்கள்தொகை (2010 est.) | |
• மொத்தம் | 17,11,000 |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கி.ஐ.கோ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | SY-DI |
மொழிகள் | அரபு மொழி |
ஆளுநரகத்தின் பரப்பளவு 107 கிமீ 2 ஆகும். இது திமிஷ்கு நகரம் மற்றும் யர்மௌக் முகாம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் மக்கள் தொகை 1,711,000 ஆகும்.
திமிஷ்கு ஒரு பீடபூமியின் முக்கிய இடத்தில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 680 மீ (2,230) உயரத்தில் உள்ளது. மேலும் இது மத்தியதரைக் கடலில் இருந்து 80 கிமீ (50 mi) தொலைவி்ல் உள்ளது. ஆண்டி லெபனான் மலைகளில் உருவாகும பரடா ஆறானது இப்பகுதிக்கு நீர் வழங்குகிறது. சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லையாக உள்ள ஆண்டி லெபனான் மலைகள், மத்திய தரைக்கடல் கடலில் இருந்து வரும் காற்றைத் தடுத்து மழை பெய்விக்கிறது. இதனால் திமிஷ்கு பகுதி மழை மறைவு பிரதேசமாகி சில நேரங்களில் வறட்சிக்கு ஆளாகிறது. என்றாலும், பண்டைய காலங்களில் இது பராடா நதியால் வளம்பெற்றது. மலையில் பனி உருகுவதன் மூலம் வரும் மலை ஓடைகளிலிருந்து இந்த ஆறு நீர்பெறுகிறது. திமிஷ்கு நகரம் கௌட்டாவால் சூழப்பட்டுள்ளது, இது ஒரு நண்செய் வேளாண் நிலமாகும். அங்கு பல வகையான காய்கறிகள், தானியங்கள், பழங்கள் பண்டைய காலங்களிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றது.
ஆளுநரகம் 107 கிமீ 2, பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 79 கிமீ 2 நகர்ப்புறமாகும் (திமிஷ்கு 77, யர்மௌக் முகாம் 2), மீதமுள்ளவை காசியோன் மலைப்பகுதி ஆகும்.
அண்டி லெபனான் மலைகளினால் மழை மறைவு பிரதேச [1] விளைவு மற்றும் கடல் நீரோட்டங்களின் காரணமாக திமிஷ்கில் கோப்பென் காலநிலை வகைப்பாட்டில் குளிர் பாலைவன காலநிலை ( BWk ) நிலவுகிறது [2] . குறைந்த ஈரப்பதத்துடன் கோடை காலம் வறண்டு வெப்பமாக இருக்கும். குளிர்காலம் குளிர்ச்சியாகவும் ஓரளவு மழையாகவும் இருக்கும்; பனிப்பொழிவு குறைவாக உள்ளது. ஆண்டு மழையளவு 130 mm (5 அங்) ஆகும். மழையானது அக்டோபர் முதல் மே வரை பொழிகிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், Damascus (டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம்) 1981–2010 | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 24.0 (75.2) |
29.0 (84.2) |
34.4 (93.9) |
38.4 (101.1) |
41.0 (105.8) |
44.8 (112.6) |
46.0 (114.8) |
44.6 (112.3) |
42.0 (107.6) |
37.8 (100) |
31.0 (87.8) |
25.1 (77.2) |
46.0 (114.8) |
உயர் சராசரி °C (°F) | 12.6 (54.7) |
14.5 (58.1) |
19.0 (66.2) |
24.7 (76.5) |
30.1 (86.2) |
34.6 (94.3) |
37.0 (98.6) |
36.8 (98.2) |
33.9 (93) |
28.1 (82.6) |
20.1 (68.2) |
14.3 (57.7) |
25.5 (77.9) |
தினசரி சராசரி °C (°F) | 6.1 (43) |
7.7 (45.9) |
11.4 (52.5) |
16.2 (61.2) |
20.8 (69.4) |
25.0 (77) |
27.3 (81.1) |
27.0 (80.6) |
24.0 (75.2) |
19.0 (66.2) |
12.1 (53.8) |
7.5 (45.5) |
17.0 (62.6) |
தாழ் சராசரி °C (°F) | 0.7 (33.3) |
1.9 (35.4) |
4.3 (39.7) |
7.9 (46.2) |
11.4 (52.5) |
15.0 (59) |
17.9 (64.2) |
17.7 (63.9) |
14.4 (57.9) |
10.3 (50.5) |
4.8 (40.6) |
1.7 (35.1) |
9.0 (48.2) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −12.2 (10) |
−12.0 (10) |
−8.0 (18) |
−7.5 (18.5) |
0.6 (33.1) |
4.5 (40.1) |
9.0 (48.2) |
8.6 (47.5) |
2.1 (35.8) |
-3.0 (26.6) |
−8.0 (18) |
−10.2 (13.6) |
−12.2 (10) |
பொழிவு mm (inches) | 25.0 (0.984) |
26.0 (1.024) |
20.0 (0.787) |
7.0 (0.276) |
4.0 (0.157) |
1.0 (0.039) |
0.0 (0) |
0.0 (0) |
0.3 (0.012) |
6.0 (0.236) |
21.0 (0.827) |
21.0 (0.827) |
131.3 (5.169) |
% ஈரப்பதம் | 76 | 69 | 59 | 50 | 43 | 41 | 44 | 48 | 47 | 52 | 63 | 75 | 56 |
சராசரி பொழிவு நாட்கள் | 8 | 8 | 6 | 3 | 2 | 0.1 | 0.1 | 0.1 | 0.2 | 3 | 5 | 7 | 42.5 |
சராசரி பனிபொழி நாட்கள் | 1 | 1 | 0.1 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0.2 | 2.3 |
சூரியஒளி நேரம் | 164.3 | 182.0 | 226.3 | 249.0 | 322.4 | 357.0 | 365.8 | 353.4 | 306.0 | 266.6 | 207.0 | 164.3 | 3,164.1 |
Source #1: Pogoda.ru.net[3] | |||||||||||||
Source #2: NOAA (sunshine hours, 1961–1990)[4] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.