பாக்கித்தானின் நகரம் From Wikipedia, the free encyclopedia
தேரா காசி கான் ( Dera Ghazi Khan ), டி.ஜி. கான் என சுருக்கமாக அழைக்கப்படும், இது பாக்கித்தானின் பஞ்சாபின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது பாக்கித்தானின் மக்கள் தொகை அதிகளவிலுள்ள பட்டியலில் 19வது இடத்திலுள்ளது.[5] சிந்து ஆற்றின் மேற்கே அமைந்துள்ள இது தேரா காசி கான் மாவட்டம் மற்றும் தேரா காசி கான் பிரிவின் தலைமையகமுமாகும். பாக்கித்தானின் எட்டாவது அதிபர் பாரூக் இலெகாரி இப்பகுதியைச் சேர்ந்தவர்.
தேரா காசி கான்
ڈیرہ غازی خان | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 30°1′59″N 70°38′24″E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
பிரிவு | தேரா காசி கான் |
மாவட்டம் | தேரா காசி கான் |
பழைய நகரம் நிறுவப்பட்டது | கி.பி.1474 |
புதிய நகரம் நிறுவப்பட்டது | கி.பி.1910 |
அரசு | |
• வகை | நகராட்சி நிர்வாகம் |
• நகரத் தந்தை | தற்போது யாருமில்லை[1] |
பரப்பளவு | |
• நகரம் | 70 km2 (30 sq mi) |
• மாநகரம் | 11,294 km2 (4,361 sq mi) |
ஏற்றம் | 123 m (404 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 3,99,064 |
• தரவரிசை | பாக்கித்தானின் 19வது இடம் |
• அடர்த்தி | 5,700/km2 (15,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாக்கித்தான் நேர வலயம்) |
• கோடை (பசேநே) | +6 |
அஞ்சல் குறியீட்டு எண் | 32200 |
தொலைபேசி இணைப்பு எண் | 064[4] |
சுருக்கமான | டிஜிகே, |
பெயர் | திகிரியன், சுலைமான் பலூச்கள் |
இணையதளம் | dgkhan |
15 ஆம் நூற்றாண்டின் இறுதியில், முல்தானின் இலங்கா சுல்தானகத்தைச் சேர்ந்த சா உசைனால் பலூச் பழங்குடியினர் இப்பகுதியில் குடியேற அழைக்கப்பட்டபோது தேரா காசி கான் நிறுவப்பட்டது. மேலும் தோடாய் தலைவரான காசி கான் மிரானியின் மகன் காசி கானின் பெயரிடப்பட்டது. தேரா காசி கான் பகுதி முகலாயப் பேரரசின் முல்தான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது..[6]
பதினைந்து தலைமுறைகளாக மிரானிகள் இப்பகுதியை ஆண்டனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காபுலின் கீழ் உள்ள தேரா காசி கானின் ஆட்சியாளராக ஜமான் கான் இருந்தார். பின்னர் அவர் இரஞ்சித் சிங்கின் தளபதி குசால் சிங் தலைமையில் முல்தானில் இருந்து சீக்கிய இராணுவத்தால் தாக்கப்பட்டார்.[7][8] இதனால் தேரா காசி கான் சீக்கிய ஆட்சியின் கீழ் வந்தது.
1947 இல் பாக்கித்தானின் சுதந்திரத்திற்கு வழிவகுத்த பாக்கித்தான் இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு, சிறுபான்மை இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். இந்தியாவில் இருந்து பல முஸ்லிம் அகதிகள் தேரா காசி கான் மாவட்டத்தில் குடியேறினர். தேரா காசி கானில் இருந்து பல இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தில்லியில் குடியேறினர். மேலும், தேரா இசுமாயில் கானிலிருந்து குடியேறியவர்களுடன் சேர்ந்து தேராவால் நகரை நிறுவினர்.[9]
பெரும்பாலான மக்கள் சுன்னி முஸ்லிம்களாக உள்ளன. பெரும்பான்மையான மக்கள் ஏழைகள் ஆனால் அவர்கள் தேசிய மற்றும் மாகாண அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த பலூச் பழங்குடியினரின் பணக்கார நிலப்பிரபுக்கள் மற்றும் தலைவர்களால் ஆளப்பட்டனர்.
இந்த நகரம் தெற்காசியாவின் பழமையான மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாபின் மற்ற நகரங்களைப் போல் தேரா காசி கான் வளர்ச்சி அடையவில்லை. 2004-2005 கணக்கெடுப்புகளின் அடிப்படையில், மாவட்டம் பாக்கித்தானின் இருபது ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நகரின் மக்கள் தொகையில் 51% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்.<ref name="Haroon Jamal">Haroon Jamal (June 2007). Income Poverty at District Level: An Application of Small Area Estimation Technique (PDF) (Report). Social Policy and Development Centre. pp. 15–18. Archived from the original (PDF) on 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.</ref
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.