சீக்கியப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீக்கியப் பேரரசு (Sikh Empire) இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது, இந்தியத் துணை கண்டத்தில், மகாராஜா ரஞ்சித் சிங் 1799ஆம் ஆண்டில் லாகூரை வெற்றி கொண்டதின் தொடர்ச்சியாக நிர்மாணித்த சமயச் சார்பற்ற பேரரசாகும்.[3] சிதறிக் கிடந்த சீக்கிய சிற்றரசர்கள் ராஜா ரஞ்சித் சிங் தலைமையில் சீக்கியப் இப்பேரரசு 1799இல் துவங்கி, 1849 முடிய இயங்கியது. சீக்கியப் பேரரசு, தற்கால இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பகுதிகளைக் கொண்டது. இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போருக்குப் பின்னர் சீக்கியப் பேரரசு வீழ்ச்சி அடைந்தது.
Remove ads
அமைப்பு
துராணிப் பேரரசின் அகமது ஷா துராணியால் அமிருதசரஸ் பல முறை தாக்கப்பட்டதால், சீக்கிய சமய அமைப்பினர் கல்ஷா எனும் படைப்பிரிவை உருவாக்கி, சீக்கிய குறுநில மன்னர்களை ஒன்றிணைத்து, ரஞ்சித் சிங் தலைமையில் 1799ஆம் ஆண்டில் சிறு அளவில் சீக்கிய அரசு உருவாக்கபட்டது.[4][5]
சீக்கிய பேரரசின் நிலப்பரப்புகள்

- இந்தியாவின் தற்கால பஞ்சாப் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மற்றும் இமாசலப் பிரதேசத்தின் சில பகுதிகள்
- பாகிஸ்தானின் தற்கால பஞ்சாப் மாநிலம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த ஆசாத் காஷ்மீர் பகுதிகள்.
- ஆப்கானிஸ்தானின் காந்தாரம் போன்ற தென் பகுதிகள்
சீக்கிய பேரரசின் வீழ்ச்சி
1839இல் ரஞ்சித் சிங் மறைவுக்குப் பின்னர் சீக்கியப் பேரரசு பலமிழந்தது. இதனை பயன்படுத்தி, இந்தியாவில் கம்பெனி ஆட்சியினர் சீக்கியர்களுக்கு எதிராக 1845ஆம் ஆண்டில் நடந்த முதலாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில், சீக்கியர்கள் தோற்றனர்.
மீண்டும் 1849ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் தோல்வியுற்ற சீக்கியப் பேரரசு கலைக்கப்பட்டது. சீக்கிய பேரரசின் பகுதிகள், ஆங்கிலேயர்க்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்தும் சீக்கிய சிற்றரசர்கள் கையில் ஆங்கிலேயர்கள் ஒப்படைத்தனர்.
முக்கிய நிகழ்வுகள்
- 1699 - குரு கோவிந்த சிங், கல்சா எனும் சீக்கிய போர்ப்படையை நிறுவுதல்
- 1710–1716, பண்டா சிங் மொகலாயர்களை வென்று கல்ஷா அமைப்பின் ஆட்சியை நிறுவுதல்
- 1716–1738, 20 ஆண்டுகள் கல்ஷா அமைப்பினர் மொகலாயரிடம் ஆட்சியை இழத்தல்
- 1733–1735, மொகலாயர் வழங்கிய கூட்டாச்சி அரசை கல்ஷா அமைப்பினர் ஏற்றல்
- 1748–1767, துராணிப் பேரரசின் அகமது ஷா அப்தாலியின் ஆக்கிரமிப்பு
- 1763–1774, சரத் சிங் சுகெர்சாகியா, குஜ்ஜரன் வாலாவில் தன்னாட்சி சீக்கிய அரசை நிறுவுதல்
- 1764–1783, தன்னாட்சி பெற்ற மன்னர்களான பாபா பஹேல் சிங், கரோர் சிங்கியா ஆகியோர் தில்லியை கைப்பற்றி மொகலாயர் மேல் வரி விதித்தல்]
- 1773, அமகது ஷா துராணி இறப்பு; அவர் மகன் தைமூர் ஷா துராணி பஞ்சாப் மீது தாக்குதல் தொடுத்தல்
- 1774–1790, சுகேர்சாகிய அரசுக்கு மகா சிங் மன்னராதல்
- 1790–1801, ரஞ்சித் சிங் சுகேர்சாகிய அரசுக்கு மன்னராதல்
- 1801 (12 ஏப்ரல்), ரஞ்சித் சிங் மகாராஜாவாக முடிசூட்டுதல்
- 12 ஏப்ரல் 1801 முதல் – 27 சூன் 1839 முடிய மகாராஜா ரஞ்சித் சிங் ஆட்சி
- 13 சூலை 1813, அட்டோக் போரில் துராணிப் பேரரசை சீக்கியர் வெற்றி கொள்ளுதல்
- மார்ச் – 2 சூன் 1818, முல்தானில் இரண்டாம் ஆப்கான் - சீக்கியப் போர்
- 3 சூலை1819, சோப்பியான் போர்
- 14 மார்ச் 1823, நௌஷெரா போர்
- 30 ஏப்ரல் 1837, ஜாம்ருட் போரில் ஆப்கானியர்களை சீக்கியர்கள் வெல்லுதல்
- 27 சூன் 1839 – 5 நவம்பர் 1840, மகாராஜா கரக் சிங்கின் ஆட்சி காலம்
- 5 நவம்பர் 1840 – 18 சனவரி 1841, சந்த் கௌர் ஆட்சி
- 18 சனவரி 1841 – 15 செப்டம்பர் 1843, மகாராஜா சேர் சிங்கின் ஆட்சி காலம்
- மே 1841 – ஆகஸ்டு 1842, சீனா-சீக்கியப் போர்
- 15 செப்டம்பர் 1843 – 31 மார்ச் 1849, மகாராஜா துலீப் சிங் ஆட்சி
- 1845–1846, முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்
- 1848–1849, இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர் முடிவில் சீக்கியப் பேரரசு பகுதிகள் பிரித்தானியா இந்தியாவுடன் இணைந்த்தல்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads