From Wikipedia, the free encyclopedia
நபோபலசார் (Nabopolassar) (பிறப்பு: கிமு 658 - இறப்பு: கிமு 605) பாபிலோனியாவின் மன்னர் ஆவார்.[1] இவ்ர் பாபிலோன் நகரத்தை தலைநகராகக் கொண்டு கிமு 626 முதல் 605 முடிய 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் புது பாபிலோனியப் பேரரசை நிறுவியர் ஆவார். இவர் கிமு 616-இல் மெசொப்பொத்தேமியாவை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.[2] இவர் மீடியாப் பேரரசு மற்றும் பிற்கால எகிப்தியர்களுடன் கூட்டமைத்து, புது அசிரியப் பேரரசுடன் மோதினார். இவர் கிமு 615-இல் புது அசிரியப் பேரரசின் நிப்பூர் இராச்சியத்தை கைப்பற்றினார்.[3]
𒀭𒀝𒌉𒍑𒌶 நபூ-அப்லா-உஃசூர் Nabû-apla-uṣur | |
---|---|
| |
மன்னர் நபோபலசாரின் உருளை முத்திரை | |
புது பாபிலோனியப் பேரரசின் மன்னர் | |
ஆட்சி | கிமு 626 – 605 |
முன்னிருந்தவர் | கந்தாலனு (பாபிலோனின் மன்னர்) |
பின்வந்தவர் | இரண்டாம் நெபுகாத்நேசர் |
பிறப்பு | கிமு 658 |
இறப்பு | கிமு 605 (அகவை 53) |
புது அசிரியப் பேரரசு வாரிசுச் சண்டை மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளால் நலிவுற்றதால், பாபிலோனியர்கள் மற்றும் மீடியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை.[4] கிமு 612-இல் மன்னர் நபோபலசாரின் பாபிலோனியப் படைகளும், மீடியர்களின் படையும் இணைந்து, புது அசிரியப் பேரரசின் தலைநகரமான நினிவேவைக் கைப்பற்றினர்.[5]
பின்னர் புது அசிரியப் பேரரசர் இரண்டாம் அசூர்-உபாலித் தங்கியிருந்த மேல் மெசொப்பொத்தேமியாவின் (வடக்கு சிரியா) அரான் நகரத்தை கிமு 610-இல் நபோபலசாரின் படைகள் கைப்பற்றியது.[6]
கிமு 609-இல் பிற்கால எகிப்திய மன்னரான இரண்டாம் நெக்கோவின் படைகள், அசிரியப் படைகளுக்கு உதவியது. கிமு 605-இல் நபோபலசார், மறைவிற்குப் பின்னர் பட்டத்து இளவரசன் இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனி அரியணை ஏறினார்.
நபோபலசார் மற்றும் அவரது மகன் இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனில் உள்ள கட்டிடங்கள், கோயில்கள் மற்றும் சிகூரட்டுகளை சீரமைத்தனர். மேலும் பாபிலோனியர்களின் மர்துக் கடவுள் கோயில்களையும் சீரமைத்தனர்.[7]
1921-இல் நபோபலசாரின் ஆப்பெழுத்துகளுடன் உருளை முத்திரையை தற்கால ஈராக் தலைநகரான பாக்தாத் நகரத்தில் கண்டுபிடித்தனர்[8]) இந்த உருளை முத்திரையில் தனது வெற்றிகளை குறித்தும், மர்துக் மற்றும் பிற கடவுள்கள் மீதான தனது பக்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.