நினிவே

From Wikipedia, the free encyclopedia

நினிவேmap
Remove ads

நினிவே (Nineveh), பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட்ட வடக்கு மெசொப்பொத்தேமியா நகரம் ஆகும். பண்டைய நினிவே நகரம் தற்போது ஈராக் நாட்டின் வடக்கில் உள்ள நினிவே ஆளுநகரகத்தில் உள்ள மோசுல் நகரத்திற்கு வடமேற்கே 2.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது டைகிரிசு ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ளது. நினிவே நகரம் கிமு 911 முதல் கிமு 609 முடிய புது அசிரியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.

விரைவான உண்மைகள் நினிவே ܢܝ݂ܢܘܹܐ, இருப்பிடம் ...
Thumb
நினிவே நகரத்தின் புது அசியரியப் பேரரசின் அரண்மனையின் சித்திரம், ஆண்டு 1853

புது அசிரியப் பேரரசு காலத்தில், உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக நினிவே நகரம் விளங்கியது.[1] புது அசிரியப் பேரரசில் கிமு 627ல் நடைபெற்ற அசிரியர்களுக்கு எதிரான நினிவே நகரத்தில் நடைபெற்ற போரில், பாபிலோனியர்கள், மீடியர்கள், சால்டியர்கள், பாரசீகர்கள் மற்றும் சிதியர்கள் நினிவே நகரத்தை தாக்கி அழித்தனர். பின்னர் கிமு 626ல் சால்டியர்கள் புது பாபிலோனியப் பேரரசை நிறுவினர்.

புது அசியரியப் பேரரசின் தலைநகரான நினிவே நகரத்தின் சிதிலங்கள், நினிவே மாகாணத்தின் ஆளுநகரத்தில் உள்ள மோசுல் நகரம் அருகே உள்ள ஆற்றின் கரையில் இன்றும் காணப்படுகிறது. நினிவே நகரத்தின் தொல்லியல் மேடுகள் மற்றும் வடக்கு அரண்மனை தொல்லியல் களங்களிலிருந்து அசிரியப் பேரரசின் சிற்பங்கள் கிடைத்துள்ளது. நினிவே தொல்லியல் களங்களிலிருந்து கண்டெடுத்த தொல்பொருட்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் பார்வைக்கு உள்ளது.

Remove ads

பழைய ஏற்பாட்டில்

Thumb
யூதர்களின் இறைவாக்கினோர் யோனா, நினிவே சுவரின் கீழ், ஓவியம் கிபி 1655

விவிலியத்தின் யோனா புத்தகத்தில் நினிவே நகரத்தின் தீர்க்கதரிசி யோனா குறித்தும், நினிவே மக்கள் குறித்தும் பேசியுள்ளது.

யூதர்களின் எபிரேய வேதாகத்தில் பண்டைய அசிரியா நாட்டின் அசூர், ஊர், நிம்ருத் நகரங்களுடன் நினிவே நகரமும் குறிப்பிட்டுள்ளது.[2][3][4][5][6][7]

யூத சமயத்தினர் வாழ்ந்த பண்டைய அசிரியாவின் தலைநகரமாக நினிவே நகரம் திகழ்ந்தது.[8] யூத தீர்க்கதரிசி சக்காரியா வாழ்ந்த காலத்தில் அசிரியப் பேரரசராக எசிக்கியா இருந்தார்.

Remove ads

புவியியல்

மத்தியதரைக் கடலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கு இடையே, மெசொப்பொத்தேமியாவின் வடக்கில், டைகிரீஸ் ஆற்றின் கரையில் அமைந்த புது அசிரியப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது நினிவே நகரம். பண்டைய அண்மை கிழக்கையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் முதன்மையான வணிகப் பாதையாக நினிவே நகரம் இருந்தது.[9]

பண்டைய வரலாறு

பண்டைய தொல்பொருட்கள் கொண்ட உலகின் பழைமையான, பெரிய நகரமான நினிவே, கிமு 6,000 ஆண்டின் புதிய கற்காலத்தின் பிந்தைய காலத்தைச் சேர்ந்தது.[10]

கிமு 3,000ல் நினிவே நகரத்தில், மெசொப்பொத்தேமியா பெண் கடவுளான இஸ்தரை வழிபட்டனர். நிலநடுக்க்த்தால் அழிந்து போன நினிவே நகரத்தை, கிமு 2,260ல் அக்காடியப் பேரரசு காலத்தில் மீண்டும் சீரமைத்து நிறுவப்பட்டது.

அசிரியப் பேரரசில்

கிமு 1800ல் பழைய அசிரியப் பேரரசு ஆட்சியில், நினிவே நகரம் இஸ்தர் எனும் பெண் கடவுளை வழிபடும் மையமாக விளங்கியது.

அசிரிய நகரமான நினிவே கிமு 1,400 முதல் 50 ஆண்டுகள் வரை மித்தானி இராச்சியத்தின் கீழ் சிற்றரசாக இருந்தது. கிமு 1,365ல் அசிரியப் பேரரசர் அசூர்-உபாலித், நினிவே நகரத்தை கைப்பற்றி மத்திய அசிரியப் பேரரசை (கிமு 1365 – 1050) நிறுவினார்.[11]

பண்டைய அண்மை கிழக்கின் முக்கியமான அசூர் நகரம், பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025–1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1365–1050) மற்றும் புது அசிரியப் பேரரசுகளின் (கிமு 911–608) தலைநகரமாக விளங்கியது.

புது அசிரியப் பேரரசர் இரண்டாம் அசூர்-நசிர்-பால் ஆட்சியில் (கிமு 883–859), நினிவே நகரத்தில் புதிய வழிபாட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டது.

Thumb
காளை மாட்டை வேட்டையாடும் குதிரைவீரர்கள் சிற்பம், கிமு 695, பெர்லின் அருங்காட்சியகம்
Thumb
தேர் வீரர்கள் சிங்கத்தை வேட்டையாடும் சிற்பம், நினிவே அரண்மனை, பிரித்தானிய அருங்காட்சியகம்

நினிவே அரண்மனை

கிமு 700ல் பெரிய அரண்மனைகளுடன் கூடியிருந்த நினிவே நகரத்தின் அரண்மனை 530 x 242 மீட்டர் நீள அகலத்துடன், சிற்பங்களுடன் கூடிய 80 அறைகளுடன் இருந்தது. மேலும் இவ்வரண்மனையில் ஆப்பெழுத்துகள் கொண்ட பலகைகள் கொண்டிருந்தது. அரண்மனையின் 22 மீட்டர் ஆழமுள்ள அடிக்கல் செங்கல், சுண்ணாம்பு மற்றும் களிமண்னால் கட்டப்பட்டது.

கிமு 612ல் நடைபெற்ற நினிவே போரின் போது, பாபிலோனியர்கள், சால்டியர்கள், பாரசீகர்கள், மீடியர்களின் தொடர் தாக்குதல்களால், புது அசிரியப் பேரரசின் தலைநகரான நினிவே நகரத்தின் செழிப்பு குறையத் துவங்கியது.

கிமு 612 முதல் மனிதர்கள் வாழ இயலாத பகுதியாக இருந்த நினிவே நகரம், பின்னர் பாரசீகர்களின் அகாமனிசியப் பேரரசின் (கிமு 550 – 330) கீழ் வந்ததது. பின்னர் நினிவே நகரம் கிமு 320ல் பேரரசர் அலெக்சாந்தர் ஆட்சியின் கீழ் சென்றது. பின்னர் சசானியப் பேரரசு (கிபி 224 – 651) ஆட்சியிலும்; கிபி 637 முதல் இசுலாமிய கலீபாக்களின் ஆட்சியின் கீழ் நினிவே நகரம் இருந்தது.

Remove ads

நினிவே போர்

நினிவே போர் கிமு 612-இல் புது அசிரியப் பேரரசிடமிருந்து நினிவே நகரத்தைக் கைப்பற்றுவதற்கு நடந்த போராகும். இப்போரின் முடிவில் மீடியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் 750 எக்டேர் பரப்பளவு கொண்ட உலகின் பெரும் நகரங்களில் ஒன்றான நினிவே நகரத்தை கைப்பற்றினர். இப்போரின் முடிவில் புது அசிரியப் பேரரசு நலிவுறத் தொடங்கியதுடன், புது பாபிலோனியப் பேரரசு எழுச்சியுறத் துவங்கியது.

Remove ads

நினிவே அகழாய்வு

Thumb
புது அசிரியப் பேரரசர் அசூர்பனிபால் அரண்மனை சுவரில் குதிரை வீரர்கள் சிற்பம், ஆண்டு கிமு 645-640, பிரித்தானிய அருங்காட்சியகம்[12]

1842ல் பிரான்சு நாட்டின் பவுல் எமிலி பொட்டா என்பவர், தற்கால ஈராக் நாட்டின் மோசுல் நகரத்தின் அருகே டைகிரீஸ் ஆற்றின் கரையில் அகழாய்வு மேற்கொண்டதில், நினிவே நகரத்தின் முற்றிலும் சிதிலமடைந்த அரண்மனை போன்ற கட்டிடங்களையும், மண் மேடுகளையும் கண்டறிந்தார்.

Thumb
நினிவே தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்த வெண்கல சிங்கச் சிலை

1847ல் பிரித்தானிய அரசியல் வல்லுனர் ஆஸ்டின் ஹென்றி லேயர்டு என்பவர் நினிவே நகரத்தின் சிதிலமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.[13][14] 1853ல் ஆஸ்டின் ஹென்றி லேயர்டு, நினிவே நகரக் கோட்டைச் சுவர்களில் 22,000 ஆப்பெழுததுக்களுடன் கூடிய, 71 அறைகள் கொண்ட சிதிலமடைந்த ஒரு அரண்மனையை அகழாய்வில் கண்டறிந்தார்.[15] நினிவே அகழாய்வுகள், கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த புது அசிரியப் பேரரசின் அரசியல், பண்பாடு மற்றும் நாகரீகத்தை படம் பிடித்து காட்டுகிறது. நினிவே தொல்லியல் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

புது அசிரியப் பேரரசின் நினிவே நகரத்தில் வாழ்ந்த யூத சமய தீர்க்கதரிசி யோனா வாழ்ந்த மண்மேடுகள் மற்றும் நினிவே நகரத்தின் 12 கி.மீ. சுற்றளவு கொண்ட நகரக் கோட்டைச் சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளது.

Remove ads

நினிவே நினைவுச் சின்னங்களை அழித்தல்

24 சூலை 2014ல் இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் பண்டைய நினிவே நகரத்தின் 12 கி.மீ. சுற்றளவு கொண்ட சுவர் குண்டுகள் வைத்து தகர்த்தனர்.[16]இசுலாமிய அரசுப் படைகள், 2016ம் ஆண்டின் நடுவில், பண்டைய நினிவே நகரத்தின் எஞ்சியிருந்த தொல்லியல் நினவுச் சின்னக் கட்டிடங்களை குண்டுகள் வைத்து தகர்த்தெரிந்தனர். சனவரி 2017ல் ஈராக்கிய படைகள் நினிவே நகரத்தை இசுலாமிய அரசின் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டனர்.

Thumb
பண்டைய நினிவே நகரத்தின் நெபி யுனுஸ் எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட காளை மாட்டின் கொம்புடன் கூடிய அரசரின் சிற்பம்
Thumb
நினிவே நகரத்தின் வீழ்ச்சி, ஓவியம் ஜான் மார்டின்

2700 ஆண்டுகள் பழமையான பாறைச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

Thumb
நினிவே மாஷ்கி நுழைவாயில்

2016-ஆம் ஆண்டில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகள் அழித்த பண்டைய நினிவே நகரத்தின் மாஷ்கி வாயிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட அமெரிக்க-ஈராக் தொல்லியல் ஆய்வாளர்கள், 2022-ஆம் ஆண்டில் மோசூல் நகரத்தில், 2700 ஆண்டுகள் பழமையான பாறை புடைப்புச் சிற்பங்கள் கண்டுபிடித்தனர். இவை எட்டு பளிங்குப் படிவப் போர்க் காட்சிகள், திராட்சை கொடிகள் மற்றும் பனை மரங்களைக் காட்டுகிறது. மேலும் கிமு 705 முதல் 681 வரை நினிவே நகரத்தை ஆட்சி செய்த புது அசிரியப் பேரரசர் சென்னாகெரிப் காலத்தைச் சேர்ந்தவை என்று ஈராக்கின் பழங்கால மற்றும் பாரம்பரிய வாரியம் தெரிவித்துள்ளது.[17][18] [19]

Remove ads

நினிவே தொல்லியல் எச்சங்கள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads