From Wikipedia, the free encyclopedia
நௌசாத் அலி (Naushad Ali) (25 திசம்பர் 1919 - 5 மே 2006) பாலிவுட் இசையமைப்பாளராவார். [1] [2] இவர் இந்தித் திரைப்படத் துறையின் மிகச் சிறந்த மற்றும் முன்னணி இசை இயக்குனர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். திரைப்படங்களில் இந்துஸ்தானி இசையின் பயன்பாட்டை பிரபலப்படுத்துவதில் இவர் குறிப்பாக அறியப்படுகிறார். [3]
நௌசாத் அலி பத்ம பூசண் | |
---|---|
2005இல் நௌசாத் அலி | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | இலக்னோ, ஒன்றிய மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா) | 25 திசம்பர் 1919
இறப்பு | 5 மே 2006 86) மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை • இந்தியத் திரைப்பட இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசை இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், தயாரிப்பாளர் |
இசைக்கருவி(கள்) | ஆர்மோனியம் • சித்தார் • கின்னரப்பெட்டி • கைம்முரசு இணை • புல்லாங்குழல் • கிளாரினெட் • அக்கார்டியன் • மாண்டலின் |
இசைத்துறையில் | 1940–2005 |
இணைந்த செயற்பாடுகள் | லதா மங்கேஷ்கர், பி. சுசீலா, ஆஷா போஸ்லே, முகமது ரபி, முக்கேஷ், சம்சாத் பேகம், கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாகித் பதாயுனி, மஜ்ரூ சுல்தான்பூரி, டி. என். மதோக் |
இசை இயக்குனராக இவரது முதல் படம் பிரேம் நகர் 1940 இல் வெளிவந்தது. இவரது இசையில் முதல் வெற்றிப் படம் ரத்தன் (1944), அதைத் தொடர்ந்து 35 வெள்ளி விழாக்கள், 12 தங்க விழாக்கள் மற்றும் 3 வைர விழாப் படங்களை தந்துள்ளார். இந்தி திரையுலகில் இவர் செய்த பங்களிப்புக்காக முறையே 1981 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் தாதாசாகெப் பால்கே விருதும், பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது . [4]
நௌசாத் அலி 25 திசம்பர் 1919 அன்று இலக்னோவில் பிறந்தார். [1] இவரது தந்தை வாகித் அலி ஒரு நீதிமன்ற எழுத்தராக இருந்தார். உஸ்தாத் குர்பத் அலி, உஸ்தாத் யூசுப் அலி, உஸ்தாத் பாபன் சாகெப் போன்றோரின் கீழ் இந்துஸ்தானி இசையைப் படித்தார். இவருக்கு ஆர்மோனியத்தை சரிசெய்யவும் தெரிந்திருந்தது. <[2]
நௌசாத் 5 மே 2006 அன்று மும்பையில் தனது 86 வயதில் இருதயக் கோளாறு காரணமாக இறந்தார். [1][2] ஜுஹு முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.