![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bf/Abdullah_Badawi_2007.jpg/640px-Abdullah_Badawi_2007.jpg&w=640&q=50)
மலேசியப் பொதுத் தேர்தல், 2004
From Wikipedia, the free encyclopedia
மலேசியப் பொதுத் தேர்தல், 2004 (ஆங்கிலம் 2004 Malaysian General Election; மலாய்: Pilihan Raya Umum Malaysia 2004; சீனம்: 2004年马来西亚大选); என்பது மலேசியாவின் 11-ஆவது பொதுத் தேர்தலாகும். இந்தத் தேர்தல் 2008 மார்ச் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.[1]
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
← மலேசிய மக்களவை உறுப்பினர்கள், 10-ஆவது மலேசிய மக்களவை உறுப்பினர்கள், 11-ஆவது → | |||||||||||||||||||||||||||||||||||||||||
219 தொகுதிகள் மக்களவை (மலேசியா) | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்தோர் | 9,755,097 | ||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 72.95% | ||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
![]() தொகுதிகளின் முடிவு | |||||||||||||||||||||||||||||||||||||||||
|
மலேசியப் பொதுத் தேர்தல் மலேசிய அரசியலமைப்பு (Constitution of Malaysia) சட்ட விதிகளின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். கடைசியாக, நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல், அதாவது மலேசியப் பொதுத் தேர்தல், 1999 (1999 Malaysian General Election), 1999-ஆம் ஆண்டில் நடைபெற்றது.[2]
மலேசியாவின் 219 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வோரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை (Member of Parliament)மலேசிய நாடாளுமன்றத்தின் (House of Parliament) மக்களவை (மலேசியா) எனும் டேவான் ராக்யாட்டிற்கு (Dewan Rakyat) தேர்வு செய்தன.