மலேசிய முன்னேற்றக் கட்சி
From Wikipedia, the free encyclopedia
மலேசிய முன்னேற்றக் கட்சி (ஆங்கிலம்: Malaysian Advancement Party (MAP); மலாய்: Parti Kemajuan Malaysia; சீனம்: 馬來西亞進步黨; சாவி: ڤرتي كماجوان مليسيا) என்பது மலேசியாவின் இந்தியர்களை மையமாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியாகும். 2019 மே 28-ஆம் தேதி இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் மலேசிய முன்னேற்றக் கட்சிMalaysian Advancement Party Parti Kemajuan Malaysia, சுருக்கக்குறி ...
மலேசிய முன்னேற்றக் கட்சி Malaysian Advancement Party Parti Kemajuan Malaysia | |
---|---|
馬來西亞進步黨 | |
சுருக்கக்குறி | MAP |
தலைவர் | வேதமூர்த்தி பொன்னுசாமி (Waytha Moorthy Ponnusamy) |
நிறுவனர் | வேதமூர்த்தி பொன்னுசாமி |
தொடக்கம் | 28 மே 2019 |
முன்னர் | இந்து உரிமைகள் போராட்டக் குழு (HINDRAF) |
கொள்கை | மலேசிய இந்தியர்களின் நலன்கள் சமச்சீர் கொள்கை மனிதநேயம் |
தேசியக் கூட்டணி | கூட்டணி: பாக்காத்தான் (2019-2022) பாரிசான் (2022-இல் இருந்து) |
நிறங்கள் | மஞ்சள், வெள்ளை, சிவப்பு, ஊதா |
மேலவை (மலேசியா): | 0 / 70 |
மக்களவை (மலேசியா): | 0 / 222 |
மாநில சட்டமன்றங்கள்: | 0 / 607 |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
www |
மூடு
மலேசிய இந்தியச் சமூகத்தின் அரசியல், பொருளியல், கல்வி, பண்பாடு, சமயம் மற்றும் சமூகம் சார்ந்த நலன்களைப் பேணிக் காப்பது இந்தக் கட்சியின் தலையாய நோக்கம் என அறியப்படுகிறது.[2]
பாக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் மலேசிய இந்தியர்களின் நம்பிக்கையும் வாய்ப்பும் புத்துயிர் பெற்றுள்ள நிலையில்; இந்தக் கட்சி அவர்களைச் சரியான முறையில் பிரதிநிதிக்கும் என்பதை உறுதி செய்யும் என்று அந்தக் கட்சியின் தலைவர் பொன்.வேதமூர்த்தி (Waytha Moorthy Ponnusamy) கூறியுள்ளார்.[3]