கோடை கால வாழிடம் அல்லது மலை வாழிடம் (ஆங்கிலம்:Summer residence அல்லது Hill station) என்பது சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். உலகெங்கிலும் குறிப்பாக கோடைகால வெப்பம் அதிகமுள்ள ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில், இவ்விடங்கள் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களாக விளங்குகின்றன. ஆங்கில ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளில், குறிப்பாக ஆசிய கண்டத்தில், ஐரோப்பியர் தங்களின் வெப்பத்தை தணிக்க வசதியாக மலைப் பிரதேசங்களில், வாழிடங்களானது ஆங்கில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டன. இவை பெரும்பாலும் 1,000 மீட்டர் முதல் 2,500 மீட்டர் (3,300 முதல் 8,200 அடி) வரையிலான உயரமுள்ள பகுதிகளிலேயே அமைக்கப்பட்டன. அரிதாக இதைவிட உயர்ந்த இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

Thumb
இந்தியாவின், இராசத்தான் மாநிலம் அபு மலை
Thumb
இந்தியாவின் இமாச்சலப் பிரதேச, கஜ்சியார்
Thumb
பாக்கித்தானின் மிகப் புகழ்வாய்ந்த மலைவாசத்தலமான முர்ரீ

வரலாறு

இந்தியாவில் மலை வாழிடங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிறுவப்பட்டன. 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கிளர்ச்சிக்குப் பிறகு, "வடக்கில் இமயமலைக்கும் தெற்கில் நீலகிரி மலைக்கும் தப்பிச் செல்லும் வகையில் பிரித்தானியர் இடங்களைக் கண்டறிந்தனர்." 1857 க்கு முன்பே இது தொடங்கியது. மற்ற காரணிகளாக இந்தியாவில் வாழ்வதில் உள்ள ஆபத்து பற்றிய கவலைகளை உள்ளடக்கியிருந்தன. மலைநகரங்களில் ஐரோப்பியரின் சொந்த நாட்டின் சூழலை உருவாக்கினர். இது லார்ட்டனின் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. 1870 களில் இதைப்பற்றி, "ஆங்கில மழையைப் போன்ற அழகான மழை, அத்தகைய சுவையான ஆங்கில உணவு." [1] என குறிப்பிட்டார். 1860 களில் சிம்லா அதிகாரப்பூர்வமாக "கோடைக்கால தலைநகர்" என ஆக்கப்பட்டது. மேலும் மலைப் பகுதிகளில் "குறிப்பாக 1857 கிளர்ச்சிக்குப் பின்னர், அரசியல் மற்றும் இராணுவ அதிகார மையங்களாக ஆக்கப்பட்டன."[2]:2

தமிழகத்தின் கோடை கால வாழிடங்கள்

  1. கோடைக்கானல்
  2. ஊட்டி
  3. குன்னூர்
  4. ஏற்காடு
    ஏற்காடு, ஐரோப்பியர்களின் கோடைக்கால மலை வாழிடங்களில் ஒன்றாக, 1862 ஆம் ஆண்டில், ஆங்கில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இராணுவ அதிகாரியாக இருந்த, "டொக்ளசு ஆமில்டன்" (Dougles Hamilton), சென்னை மாகாண அரசிடம் (Madras government) பரிந்துரைத்தார். அப்பரிந்துரையில், ஐரோப்பியர்களின் வருகையால், ஏற்காடு என்ற மலை வாழிடம், கோடை வாழிடமாக வளர்ந்துள்ளதை விளக்கியிருந்தார். அதன் பிறகு, 1863 ஆம் ஆண்டு, சேர்வராயன் மலைப் பகுதியில் இருந்த 80 சுற்றலா இடங்களை, ஆங்கில அரசாங்கம் வெளியிட்டது. இந்த அறிவிப்பால், உலகின் பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு அதிகமாக வரத் தொடங்கினர்.
  5. கொல்லிமலை

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.