மைக்கல் வோகன்
இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் / From Wikipedia, the free encyclopedia
மைக்கல் வோகன் (Michael Vaughan, பிறப்பு: அக்டோபர் 29 1974 , இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் மற்றும் தலைவர் ஆவார்.. இவர் 82 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 86 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 268 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 282 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 265 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மைக்கல் வெகைன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 2 அங் (1.88 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 600) | நவம்பர் 25 1999 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூலை 30 2008 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 161) | மார்ச்சு 23 2001 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | ஏப்ரல் 21 2007 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 99 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூலை 4 2009 |
வாகன் 51 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார்.அதில் 26 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதில் ஒரு போட்டியில் உலக சாதனை படைத்தது. 2004 ஆம் ஆண்டில் உள் நாட்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரின் தலைமையிலான அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 2–1 என்ற வெற்றியைப் பெற்றது. இது 1986/87 ஆம் ஆண்டிற்குப் பிறகான இங்கிலாந்தின் முதல் ஆஷஸ் வெற்றியாகும்.தொடர்ச்சியான முழங்கால் காயம், மற்ற தொடக்க வீரர்களுக்கு ( ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் அலெஸ்டர் குக் ) இடமளிக்கும் இவரது முடிவும்,தலைவர் பதவியின் அழுத்தங்களும் இவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில் வாகனின் மட்டையாட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தின. தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் தலைவராக இருந்த சமயத்தில் இவரது மட்டையாட்ட சராசரி 36.02 ஆகவும் தலைவராக இல்லாத சமயத்தில் 50.95 ஆகவும் இருந்தது.வாகன் 30 ஜூன் 2009 அன்று முதல் தர துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[1]