ஹுனான் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
ஹுனான் மாகாணம் (சீனம்: 湖南; பின்யின்: Húnánⓘ, ஆங்கில மொழி: Hunan Province) என்பது சீன மக்கள் குடியரசு நாட்டின் தென்மத்திய சீனப்பகுதியிலுள்ள ஒரு மாகாணங்களுள் ஒன்று. தோங்டிங் ஏரியின் தெற்கில் மாகாணம் உள்ளது. (இதனால் "ஏரியின் தெற்கு" என்னும் பொருளில் இதன் பெயர் ஹுனான் என்று ஏற்பட்டது.)[4] ஹுனான் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாகவும், சுருக்கமாகமாகவும் " 湘 "(ஷியாங்- Xiang) என்று அழைக்கப்படுகிறது.[5] ஷியாங் ஆறு இந்த மாகாணத்தில் பாய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஹுனான் மாகாணம்Hunan Province 湖南省, பெயர் transcription(s) ...
ஹுனான் மாகாணம்
Hunan Province 湖南省 | |
---|---|
பெயர் transcription(s) | |
• சீனம் | 湖南省 (Húnán Shěng) |
• சுருக்கம் | 湘 (pinyin: ஷியாங்) |
சீனாவில் அமைவிடம்: ஹுனான் மாகாணம் Hunan Province | |
பெயர்ச்சூட்டு | 湖 hú – lake 南 nán – south "south of the lake" |
தலைநகரம் | சாங்ஷா |
பெரிய நகரம் | சாங்ஷா |
பிரிவுகள் | 14 அரச தலைவர், 122 கவுண்டி மட்டம், 2576 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | ஷு ஷோயுஷிங் |
• ஆளுநர் | டு ஷியாஹாவோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,10,000 km2 (80,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 10 வது |
மக்கள்தொகை (2014)[2] | |
• மொத்தம் | 6,73,70,000 |
• தரவரிசை | 7 வது |
• அடர்த்தி | 320/km2 (830/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 13 வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான் – 90% துஜா – 4% மொங் – 3% தோங் – 1% யாவோ – 1% ஏனையோர் – 1% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | சீன பேச்சு வழக்குகள்: சியாங், கான், தென்மேற்கு மன்டரின், சோசுவா டுகா, வக்சியாங், ககா. சீனமற்ற மொழிகள்: கோ சியங், டுயா, மெயின், டோங் |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-43 |
GDP (2014) | CNY 2.705 டிரில்லியன் US$ 440.29 பில்லியன் (10 வது) |
• per capita | CNY 37,475 US$ 6,100 (20 வது) |
HDI (2010) | 0.681[3] (medium) (18வது) |
இணையதளம் | www |
மூடு
விரைவான உண்மைகள் ஹுனான் மாகாணம், சீன எழுத்துமுறை ...
ஹுனான் மாகாணம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
சீன எழுத்துமுறை | 湖南 | ||||||
|
மூடு
ஹுனான் மாகாணத்தின் எல்லைகளாக வடக்கில் ஹூபேய் மாகாணமும், கிழக்கில் ஜியாங்சி மாகாணமும், தென்கிழக்கில் குவாங்டாங் மாகாணமும், தென்மேற்கில் குவாங்ஸி மாகாணமும், மேற்கே குயிசூ மாகாணமும், வடமேற்கில் சோங்கிங் நகரமும் அமைந்துள்ளன. மாகாணத் தலைநகர் சாங்ஷா ஆகும்.