அகர் மால்வா மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகர் மால்வா மாவட்டம் (Agar Malwa District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் அகர் நகரம் ஆகும். இம்மாவட்டம் உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.
அகர் மால்வா மாவட்டம் மத்தியப் பிரதேசத்தின் ஐம்பத்து ஒன்றாவது மாவட்டமாகும். சாஜாபூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 16 ஆகஸ்டு 2013 அன்று அகர் மால்வா மாவட்டம் துவங்கியது. 2,785 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 4.80 இலட்சமாகும்.
Remove ads
மாவட்ட எல்லைகள்
அகர் மால்வா மாவட்டத்தின் வடக்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவார் மாவட்டம் , வடகிழக்கில் ராஜ்கர் மாவட்டம், தென்கிழக்கில் சாஜாபூர் மாவட்டம், தெற்கிலும், தென்மேற்கிலும் உஜ்ஜைன் மாவட்டம், மேற்கில் ரத்லாம் மாவட்டம் மற்றும் வடமேற்கில் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவார் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
அகர் மால்வா மாவட்டம் அகர் மற்றும் சுஸ்னர் என இரண்டு உட்கோட்டங்களும், அகர், சுஸ்னர், பதோத் மற்றும் நல்கேடா என நான்கு வருவாய் வட்டங்களுடன் கூடியது.[3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads