அக்‌சய் குமார்

இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர். From Wikipedia, the free encyclopedia

அக்‌சய் குமார்
Remove ads

அக்சய் அரிஓம் பாட்டியா (Akshay Hariom Bhatia) [1] (பிறப்பு ராஜீவ் அரிஓம் பாட்டியா ; 9 செப்டம்பர் 1967), [2] தொழில் ரீதியாக அக்சய் குமார் பாலிவுட்டில் பணிபுரியும் இந்திய நடிகரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். 30 ஆண்டுகளுக்கும் மேலான நடித்துவரும் இவர், 100 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார். இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இவர் 2009 இல் இந்திய அரசிடமிருந்து இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீவிருதினைப் பெற்றார். குமார் இந்தியத் திரைப்படத்துறையில் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவர். [3] [4] அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் 2015 முதல் 2020 வரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல்களில் இவரை சேர்த்துள்ளது [5] [6] 2019 மற்றும் 2020 க்கு இடையில், இரண்டு பட்டியல்களிலும் இவர் மட்டுமே இந்தியராக இருந்தார். [7] [8] [9]

விரைவான உண்மைகள் அக்‌சய் குமார், பிறப்பு ...
Remove ads

திரை வாழ்க்கை

குமார் தனது வாழ்க்கையை 1991 இல் சவுகந்த் என்ற திரைப்படத்துடன் தொடங்கினார். ஒரு வருடம் கழித்து கிலாடி என்ற அதிரடி படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார். இந்தத் திரைப்படம் 1990 களில் இவரை ஒரு அதிரடி நட்சத்திரமாக நிலைநிறுத்தியது. மொஹ்ரா (1994) மற்றும் ஜான்வர் (1999) போன்ற பிற அதிரடித் திரைப்படங்களுக்கு மேலதிகமாக, கிலாடி திரைப்படம் பல தொடர் திரைப்படங்களுக்கு வழிவகுத்தது. யே தில்லாகி (1994) என்ற இவரது ஆரம்பகால காதல் திரைப்படம் நேர்மறையான வரவேற்பைப் பெற்றாலும், அடுத்த பத்தாண்டுகளில் தனது பாத்திரங்களின் வரம்பை விரிவுபடுத்தினார். காதல் படங்களான தட்கன் (2000), அந்தாஸ் (2003), நமஸ்தே லண்டன் (2007), மற்றும் ஹேரா பெரி (2000), முஜ்சே ஷாதி கரோகி (2004), பிர் ஹேரா பெரி (2006), ஃபிர் ஹேரா பெரி (2000 ), பூல் புலையா (2007), மற்றும் சிங் இஸ் கிங் (2008) உள்ளிட்ட பல படங்களில் தனது நகைசுவை நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்றார். அஜ்னபீ (2001) திரைப்படத்தில் எதிர்மறையான பாத்திரம் மற்றும் கரம் மசாலா (2005) திரைப்படத்தில் நகைச்சுவை நடிப்பிற்காக பிலிம்பேர் விருதுகளை வென்றார்.

ரஸ்டோம் (2016) படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[10][11][12] இவர் சுயமாகத் தயாரித்த சமூகத் திரைப்படங்களான டாய்லெட்: ஏக் பிரேம் கதா (2017) மற்றும் பேட் மேன் (2018), அத்துடன் போர்த் திரைப்படமான கேசரி (2019) ஆகியவற்றிற்காக மேலும் பாராட்டயும் பெற்றார். மேலும் 2019 இல் வெளியான மிஷன் மங்கள், ஹவுஸ்ஃபுல் 4, குட் நியூஸ், மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் திரைப்படம் சூரியவன்ஷி .ஆகிய படங்கள் திரையரங்க வசூலில் சாதனைகளைப் படைத்தது.

Remove ads

தொலைக்காட்சி நிகழ்ச்சி

நடிப்பு மட்டுமின்றி, சண்டை நடிகராகவும் குமார் பணியாற்றியுள்ளார். [a] 2008 இல், இவர் ஃபியர் ஃபேக்டர்: காட்ரான் கே கிலாடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் 2014 இல் டேர் 2 டான்ஸ் என்ற உண்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொடங்கினார். மேலும் உலக கபடி லீக்கில் விளையாடும் கல்சா வாரியர்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவார். நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலை பயிற்சி பள்ளிகளையும் நிறுவினார். [14] [15] இந்தியாவின் பரோபகார நடிகர்களில் ஒருவரான குமார், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகிறார். இவர் இந்தியாவில் முன்னணி விளம்பர அங்கீகாரம் பெற்ற பிரபலமாவார். [16]

Remove ads

கனடா குடியுரிமை

2011 கனடா நடுவண் அரசுத் தேர்தலின் போது அல்லது அதற்குப் பிறகு, கனடா பழமைவாதக் கட்சி அரசாங்கம் குமாருக்கு கனடிய குடியுரிமையை வழங்கியது. [17] 15 ஆகஸ்ட் 2023 அன்று, குமார் இந்தியக் குடியுரிமையை திரும்பப் பெற்றதை உறுதிப்படுத்தினார். மேலும் இந்தியச் சட்டத்தின் ஒரு பகுதியாக கனடிய குடியுரிமை திரும்பப் பெறப்பட்டது.

குறிப்புகள்

  1. has often performed stunts in his films, which has earned him the sobriquet "Indian ஜாக்கி சான்".[13]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads