அங்கமாலி
கேரளத்தில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அங்கமாலி என்னும் ஊர், கேரளத்தில் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு நகராட்சி ஆகும். இதன் அருகில் தேசிய நெடுஞ்சாலை 544 உள்ளது. அங்கமாலி, கேரளத்தின் முக்கிய நகரமான கொச்சியில் இருந்து வடக்கில் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊரின் தெற்கில் ஆலுவையும், காலடியும், வடக்கில் சாலக்குடியும், கிழக்கில் பஸ்சிமகட்டமும், மேற்கில் பறவூரும், மாளையும் அமைந்துள்ளன.
இங்கு சூரியானி கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வாழ்ந்தனர். அவர்களின் தலைமையகமாக அங்கமாலி நகரம் விளங்கியது. பின்னர், போர்த்துகீசுக்காரர்களின் காலத்தில், போர்த்துகீச ஆயரின் மையமாகவும் இருந்தது.
சங்கராச்சார்யர் பிறந்த ஊரான காலடி, இங்கிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
ஆலயங்கள்
- கிறிஸ்தவத் தலங்கள்:
- அகப்பறம்பு சீரோ-மலபார் கத்தோலிக்கத் தேவாலயம்
- புனித ஜோர்ஜ் சீரோ-மலபார் கத்தோலிக்கத் தேவாலயம்
- யாக்கோபாய சூரியானி ஆர்த்தடக்ஸ் தேவாலயம்
உழவுத் தொழில்
இங்கு தீப்பெட்டி, ஓடு ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உள்ளன. அரிசி அரவை ஆலைகளும் உள்ளன. பாய்களும், கூடைகளையும் தயாரித்து விற்கின்றனர். கேரள அரசின் மூங்கில் தொழிற்சாலையும் இங்குள்ளது.[1]
படங்கள்
- யாக்கோப் சூரியானி தேவாலயம்
- கிர்வாசிஸ்-பிரொத்தாசிஸ் சீரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம்
- புனித ஹோர்மிஸ் தேவாலயம்
- மார்ட்டின் டி போறஸ் தேவாலயம்
- புனித மேரி தேவாலயம்
- ரீத்தா புனித தேவாலயம், சம்பன்னூர்
இணைப்புகள்
- அங்கமாலி.காம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads