அங்காரா

துருக்கியின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

அங்காரா
Remove ads

அங்காரா துருக்கியின் தலைநகரம் ஆகும். 2007ல் மதிப்பீட்டின் படி இந்த நகரத்தில் 3,901,201 மக்கள் வாழ்கிறார்கள்.[2] [3] இசுதான்புல் நகருக்கு அடுத்து துருக்கியின் மிகப்பெரிய நகரமாக அங்காரா இருக்கிறது.

விரைவான உண்மைகள் அங்காரா, நாடு ...

முஸ்டபா கமால் என்ற மாவீரர் துருக்கிக் குடியரசை தோற்றுவித்தபோது அங்காராவை தலைநகரமாக்கினார். இது `ஹடிப்’, `இனீசு’, `குபெக்’ நதிகள் சேருமிடத்திலிருக்கின்றது. இங்குதான் கி.பி.1920-ல் முதன் முதலாக துருக்கிய சட்டமன்றம் கூட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கர்கள் ஆசியா மைனரின் ஒரு பகுதியான அண்டோலியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இந்நகரம் முன்பு சதுப்பு நிலங்களால் சூழப்பட்ட குன்றுப்பிரதேசமாயிருந்தது. அங்கோரா வெள்ளாட்டின் உரோமத்திலிருந்து செய்யப்பட்ட கம்பெளிகள் பெயர்பெற்றவை. பழைய நகரத்தில் ரோமானியர், கிரேக்கர், ஹிட்டைட் முதலியோர் கட்டிய கட்டடங்கள் அப்படியே உள்ளன. சதுப்பு நிலத்திலுள்ள நீரை அகற்றிவிட்டு அங்கு பெரிய பெரிய கட்டடங்களை எழுப்பிப் புதிய அங்கோரா தலைநகரம் நிருமாணிக்கப்பட்டது. பல்கலைக்கழகக் கட்டடங்கள், சட்டமன்ற கட்டடங்கள், பெரிய தெருக்கள், விளையாட்டுத் திடல்கள், விமான நிலையம், அரும்பொருட்காட்சியங்கள் முதலியவற்றைக் கொண்டது இந்நகரம். நவீன துருக்கிக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளக்குகிறது.


Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads